Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனுஷின் இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? அப்டேட் இதோ

Idly Kadai Movi: நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது இட்லி கடை என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்.

தனுஷின் இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? அப்டேட் இதோ
இட்லி கடைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jul 2025 19:48 PM

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என ஒரு ஆல்ரவுண்டராக வலம் வருகிறார் தனுஷ் (Actor Dhanush). இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பது போல இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது தனுஷ் இயக்கி நடித்து உள்ள படம் இட்லி கடை. இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியது. ஆனால் படத்தில் சில முக்கிய காட்சிகள் படமாக்க வேண்டும் என்ற காரணத்தால் அப்போது குறிப்பிட்ட நேரத்தில் இந்தப் படம் வெளியாகவில்லை. டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஸ் பாஸ்கரன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படம் தற்போது படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் தீவரமாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 27-ம் தேதி வெளியாகும் இட்லி கடை படத்தின் முதல் சிங்கிள்:

இந்த நிலையில் வருகின்ற 28-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் தனுஷின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் இட்லி கடை படத்தில் எழுதி பாடியுள்ள முதல் சிங்கிள் வருகின்ற 27-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் முன்னதா வெளியிட்ட அறிவிப்பில் இந்தப் படத்தின் முதல் சிங்கிளை நடிகர் தனுஷ் எழுதி பாடியுள்ளார் என்று தெரிவித்து இருந்தார். மேலும் இந்தப் பாடலை தனுஷ் உடன் இணைந்து பாடகி ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். மேலும் இவர்களது காம்போவில் முன்னதாக வெளியான பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… விஜய் சேதுபதி – நித்யா மேனனின் தலைவன் தலைவி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

இட்லி கடை படத்தின் முதல் சிங்கிள் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பாமக தலைவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கும் சேரன் – ராமதாஸாக நடிக்கும் நடிகர் ஆரி!