Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காதல் பட முருகனை நேரில் சந்தித்தால்…. இயக்குநர் பாலாஜி சக்திவேல் சொன்ன விசயம்

Director Balaji Sakthivel: தமிழ் சினிமாவில் இயக்குநராக பல சிறந்தப் படங்களை கொடுத்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் தற்போது முழு நேர நடிகராக மாறிவிட்டார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் முன்னதாக இயக்கிய காதல் படத்தின் இயக்குநரை நேரில் சந்தித்தால் என்ன செய்வேன் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

காதல் பட முருகனை நேரில் சந்தித்தால்…. இயக்குநர் பாலாஜி சக்திவேல் சொன்ன விசயம்
இயக்குநர் பாலாஜி சக்திவேல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 27 Jul 2025 18:50 PM

தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் ஆழமாக பதியக்கூடிய படங்களை இயக்கும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல் (Director Balaji Sakthivel). இவர் கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் என்ற படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார். அரசாங்கத்தின் நடைபெறும் ஊழல் காரணமாக சாதாரண மக்கள் எவ்வளவு பாதிப்பை சந்திக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருந்தது. மேலும் பல உண்மை சம்பவங்களையும் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் உடன் இனைந்து நடிகர்கள் அனிதா ஹாசனந்தனி, ஜெய முத்திரை, நாசர், ஜெயக்குமார், அனுபம் ஷ்யாம், கொல்லம் துளசி, சின்னி ஜெயந்த், பிந்து பணிக்கர், வடிவுக்கரசி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2004-ம் ஆண்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய படம் தான் காதல். நடிகர் பரத் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை சந்தியா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் சுகுமார், தண்டபாணி, எஸ். கிருஷ்ண மூர்த்தி, அருண் குமார், சரவணன், சரண்யா, பல்லு பாபு, முத்துராமன், சிவகுமார், ஸ்ரீதர், சூரி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

காதல் படத்தின் கதை என்ன?

பைக் மெக்கானிகாக இருக்கும் முருகன் ஒரு உயர் ஜாதி என்று அழைக்கப்படும் பிரிவைச் சேர்ந்த பொண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வார். அவர்கள் இருவரையும் வாழ வைப்பதாக கூறி அழைத்துவந்த அந்த பெண்ணின் குடும்பத்தினை முருகனை அடித்தே மன நலம் பாதிக்க வைத்துவிடுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு வேறு ஒரு திருமணத்தையும் செய்து வைக்கின்றனர். அந்த பெண் வீட்டாரால் பாதிக்கப்பட்ட முருகன் பைத்தியமாக ரோட்டில் திரிகிறார். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

காதல் பட முருகனை சந்திப்பது குறித்து பேசிய பாலாஜி சக்திவேல்:

இயக்குநர் பாலாஜி சக்திவேல் தற்போது படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு முழு நேரமும் நடிகராக தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பைப் கொடுத்தது போல இவரது நடிப்பிற்கும் ரசிகர்கள் வரவேற்பைப் தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் செய்தியாளர் நீங்கள் காதல் பட முருகனை சந்தித்தால் என்ன சொல்ல நினைப்பீங்க என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த இயக்குநர் பாலாஜி சக்திவேல், எனக்கு என்ன சொல்றதுனு தெரியல.

Also Read… இரண்டாவது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்… வைரலாகும் புகைப்படங்கள்

அங்க இருந்து வந்ததால அந்த பழைய வாழ்க்கைய நியாபகப்படுத்த கூடாதுனு நினைக்கிறேன். புது வாழ்க்கையை அப்படியே அங்கிருந்து தொடங்கி வாழ்ந்துட்டு போகனும் என்றும். அந்த உண்மை சம்பவம் என்பதால் அதில் எதுவும் பேச முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் கவனம் பெரும் பாலாஜி சக்திவேலின் பேட்டி:

Also Read… 6 ஆண்டுகளை கடந்த டியர் காம்ரேட் படம்… பிடிஎஸ் புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா!