நடிப்பிற்காக எவ்வளவு கடுமையாக உழைக்கவும் நான் தயார் – டிஎன்ஏ பட நடிகை நிமிஷா சஜயன்
Actress Nimisha Sajayan: மலையாள சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை நிமிஷா சஜயன். இவர் தமிழி நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் மூலம் அறிமுகம் ஆன நிலையில் தற்போது நடிகர் அதர்வா உடன் இணைந்து டிஎன்ஏ படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நிமிஷா சஜயன் (Actress Nimisha Sajayan) தற்போது தமிழில் இறுதியாக நடித்தப் படம் டிஎன்ஏ. இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடித்து இருந்தார். இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துமவனையில் பிறக்கும் குழந்தைகளை அங்கு இருந்து கடத்தி பணம் உள்ளவர்களுக்கு விற்றுவிடும் ஒரு கடத்தல் கும்பளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருந்தது. விறுவிறுப்பான கதைகளத்தை கொண்ட இந்தப் படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை நிமிஷா சஜயனுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம். இந்த நிலையில் நடிகை நிமிஷா சஜயன் சமீபத்தில் தனது நடிப்பு வாழ்க்கை குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




கவனம் பெரும் நடிகை நிமிஷா சஜயனின் பேச்சு:
அதன்படி நடிகை நிமிஷா சஜயன் பேசியுள்ளதாவது. நடிப்பு என்பது என் வாழ்க்கையில் ஒரு தவம் போன்றது. அந்த நடிப்பிற்காக எவ்வளவு சிரமத்தை நான் ஏற்க வேண்டும் என்றாலும் அதனை செய்வேன் என்று தெரிவித்து இருந்தார். மேலும் டிஎன்ஏ படத்தின் எனது நடிப்பை அனைவரும் பாராட்டியபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் பெரிய பட்ஜெட் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வெற்றியடைவது பெரிய விசயம் அல்ல. ஆனால் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுவது பெரிய விசயம் அதனால் இந்தப் படத்தின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் நடிகை நிமிஷா சஜயன் தெரிவித்து இருந்தார்.
Also Read… வேட்டையன் படத்தில் பேட்ரிக் ரோல் இப்படிதான் கிடைத்தது – ஃபகத் பாசில் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
டிஎன்ஏ படம் குறித்து நடிகை நிமிஷா சஜயன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
Also Read… ரஜினிகாந்த் தவிற வேறு எந்த தமிழ் நடிகரை பிடிக்கு… செய்தியாளரின் கேள்விக்கு தனுஷின் நச் பதில்!