பிளாக் அண்ட் ஒயிட்டில் ரசிகர்களைக் கவரும் சமந்தா.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
Samantha Ruth Prabhu : பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவரின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகை சமந்தா சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu), பான் இந்திய சினிமாவில் முன்னணி நடத்திரமாக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக இந்தத் திரைப்படங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இறுதியாக வெளியான படம் குஷி (Kushi). கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படத்தில், விஜய் தேவரகொண்டவுடன் (Vijay Deverakonda) இணைந்து நடித்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உடல் நிலை சரியில்லாதக் காரணத்தால் சினிமாவில் இருந்து விலகி ஓய்வெடுக்கச் சென்றார். பின் மீண்டும் வெப் தொடரின் மூலம் தனது நடிப்பை தொடங்கினார், இதை அறிந்த நடிகை சமந்தா தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி திரைப்படங்களை தயாரத்து வருகிறார்.
இந்த நிறுவனத்தின் கீழ் சமீபத்தில் சுபம் (Subham) என்ற படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. எப்போதும் சோஷியல் மீடியாவின் ஆக்சிடிவாக இருக்கும் சமந்தா, தனது புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் கருப்பு மற்றும் வெள்ளை (Black and white) நிறத்தில் பகிர்ந்த புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சேலையில் ரசிகர்களைக் கவரும் வண்ணத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.




இதையும் படிங்க : படத்திற்காக புது விசயத்தைக் கற்றுக்கொண்ட நடிகை மிருணாள் தாக்கூர் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
நடிகை சமந்தா பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
இந்த பதிவில் நடிகை சமந்தா, பிளக்க அன்ட் வைட் நிறத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவ்வப்போது புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கொள்ளைகொள்ளும் சமந்தாவின் இந்த புதிய பதிவும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா இரண்டாவது திருமணம் செய்கிறாரா?
நடிகை சமந்தா ரூத் பிரபு, இரண்டாவது திருமணம் செய்யவிருப்பதாக சமீப காலமாக இணையதளங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது. இவர் பிரபல இயக்குநர் ராஜ் நிதிமோரு என்பவரைக் காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீப காலமாக நடிகர் சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகச் சென்றுவருவது அனைவருக்கும் தெரிந்ததே. நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் இயக்குநர் ராஜ் நிதிமோரவின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தின் முதல் பாடலில் ப்ரோமோ வீடியோ.. பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?
இந்நிலையில், சமீபத்தில் இணையத்தில் வெளியான தகவலின்படி, இவர்கள் இருவரும் வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இருவரின் குடும்பத்தார் முன்னிலையில், இவர்கள் திருமணம் நடக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இது குறித்து நடிகை சமந்தாவும் சரி , இயக்குநர் ராஜ் நிதிமோருவும் சரி விளக்கமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.