Madharaasi : சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தின் முதல் பாடலில் ப்ரோமோ வீடியோ.. பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?
Madharaasi Movie First Song Promo Video : இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் மதராஸி. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் கடைசியாக தமிழில் அமரன் (Amaran) படமானது வெளியானது. இந்த படமானது பான் இந்திய அளவில் சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக, சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாக உருவாகியிருப்பது மதராஸி (Madharaasi) திரைப்படம். இந்த படத்தை கோலிவுட் பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணைந்த முதல் திரைப்படமாகவும் இந்த மதராஸி அமைந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழ் ஏஸ் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மதராஸி திரைப்படமானது முழுக்க ஆக்ஷ்ன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளதாம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடகர் சாய் அபயங்கரின் குரலில், “சலம்பல” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படலானது வரும் 2025, ஜூலை 31ம் தேதியில் வெளியாகும் என அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க : மோகன்லாலின் லூசிஃபர் 3 படம் பற்றி தவறான கருத்து? – நடிகர் பிருத்விராஜ் தரப்பு விளக்கம்!
மதராஸி படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வீடியோ :
Vibe check – blast 💥#Madharaasi goes MAD with the first single – check out the promo here!
▶️ https://t.co/d8ZLyfgnZK#Madharaasi first single #Salambala out on July 31st at 6 PM 🤙🏻
An @anirudhofficial banger 🥁
Sung by @SaiAbhyankkar
Lyrics by #SuperSubu #DilMadharaasi… pic.twitter.com/HMArN6nhLO— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) July 29, 2025
மதராஸி திரைப்படத்தின் ஷூட்டிங் :
சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமான மதராஸி திரைப்படத்தின் ஷூட்டிங், சமீபத்தில் இலங்கையில் நிறைவடைந்தது. இப்படத்தின் ஆக்ஷ்ன் காட்சிகள் ஷூட்டிங் இலங்கை கப்பல் துறைமுகத்தில் வைத்து எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட திரைப்படமாகவும் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படமானது சுமார் ஒரு வருடங்களுக்கும் மேலாகத் தயாராகிவந்த நிலையில், இந்த 2025ம் ஆண்டு வெளியாகிறது.
இதையும் படிங்க : சஞ்சய் தத்தின் பிறந்த நாளில் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட தி ராஜா சாப் படக்குழு!
இந்த மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர்கள் விக்ராந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லாரக்கல் மற்றும் பிரேம் குமார் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வீடியோ வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டியுள்ளது என்றே கூறலாம்.