தளபதி விஜய் இல்லாமல் எல்சியு முழுமையடையாது… ஆனால் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது தனது இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படத்தின் வெளியீட்டு பணியில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் கூலி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் இல்லாமல் எல்சியு முழுமை அடையாது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj). அதனைத் தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கிறார். தமிழ் சினிமாவில் இருக்கும் பொதுவான டெம்பேல்ட்களை உடைத்து இவர் இயக்கிய இந்த கைதி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் முன்னதாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் ரெஃபரன்ஸ்களை வைத்து தமிழ் சினிமாவில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற முறையை கொண்டுவந்தார். தமிழ் சினிமாவில் இதுதான் முதல் முறை பலதரப்பட்ட படங்களை ஒரே புள்ளியில் இணைக்கும் முயற்சி என்று கூட சொல்லலாம்.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தையும் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணைத்து க்ளைமேக்ஸ் காட்சியில் இந்த லியோ படம் எல்சியு-வில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தினார் லோகேஷ் கனகராஜ்.




விஜய் இல்லாமல் எல்சியு முழுமையடையாது:
இந்த நிலையில் லியோ படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தை தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் எல்சியு-வில் வராது என்பதை முன்னதாகவே லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த கூலி படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் கூலி படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எல்சியு குறித்து பேசியுள்ளார்.
அதில் தளபதி விஜய் இல்லாமல் எல்சியு முழுமையடையாது. ஆனால் அவர் தற்போது வேறு ஒரு பாதையில் தீர்க்கமாக சென்றுகொண்டிருக்கிறார். அவர் என்ன முடிவு செய்வார் என்பது அவர் கையில் தான் உள்ளது என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருக்கின்றது.
இணையத்தில் கவனம் பெறும் லோகேஷ் கனகராஜின் பேச்சு:
“Without #ThalapathyVijay there won’t be LCU🤞. But I don’t know whether he will be part of it, as you all know where his vision stands today🤝. But anyday LCU won’t be fulfilled without @actorvijay na🙁♥️”
– #LokeshKanagaraj pic.twitter.com/DcZkSpM7JI— AmuthaBharathi (@CinemaWithAB) July 28, 2025
Also Read… லெவன் பட நடிகர் நவீன் சந்திராவின் புதுப் படம் குறித்த அறிவிப்பு – வைரலாகும் இன்ஸ்டா பதிவு