Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழில் ரீமேக் செய்யப்படும் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த கோர்ட் படம் – யார் நடிகர் தெரியுமா?

Court State vs A Nobody: தெலுங்கு சினிமாவில் நடிகர் நானி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் கோர்ட். இந்தப் படம் தெலுங்கு மொழியில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர்.

தமிழில் ரீமேக் செய்யப்படும் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த கோர்ட் படம் – யார் நடிகர் தெரியுமா?
கோர்ட் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jul 2025 17:46 PM

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் நானியின் தயாரிப்பில் வெளியான படம் கோர்ட் ஸ்டேட் VS நோபடி (court state vs a nobody). பிரசாந்தி திபிர்னேனி தயாரித்து, வால் போஸ்டர் சினிமாவின் கீழ் நானி இந்தப் படத்தை வழங்கினார். இயக்குநர் ராம் ஜகதீஷ் கோர்ட் ஸ்டேட் VS நோபடி படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராம் ஜகதீஷ் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததால் தென்னிந்திய சினிமாவில் இவர் பிரபலம் அடைந்தார். கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியான கோர்ட் ஸ்டேட் VS நோபடி படத்தில் நடிகர் பிரியதர்ஷி புலிகொண்டா நாயகனாக நடித்து இருந்தார்.

இவருடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் பி.சாய் குமார், ரோகினி, சிவாஜி, ஹர்ஷ வர்தன், ஹர்ஷ் ரோஷன், சுபலேகா சுதாகர், மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்பெற்றது.

தெலுங்கு சினிமாவில் ஹிட் அடித்த கோர்ட் ஸ்டேட் VS நோபடி படத்தின் கதை என்ன?

இந்தியாவில் குழந்தைகளுக்கு குறிப்பாக 18 வயதிற்கு குறைவான ஆண் மற்றும் பெண் இருவருக்கும் நடைபெறும் வன்முறைகளை தடுக்கும் விதமாக போக்சோ சட்டத்தை இயற்றி அது நடைமுறையில் உள்ளது. இந்த சட்டம் பலருக்கும் பயனுள்ளதாக இருந்தாலும் சில இடங்களில் போக்சோ சட்டம் எப்படி எல்லாம் தவறாக பயன்படுத்தப் படுகின்றது என்பதை இந்தப் படத்தில்  படக்குழு மிகவும் விளக்கமாக காட்டியிருந்தனர்.

இந்தப் படத்தின் இயக்குநருக்கு இது முதல் படம் என்றாலும், படத்தில் இயக்குநர் மிகவும் தெளிவாக இந்த போக்சோ சட்டம் என்ன எல்லாம் செய்யும் என்பதை மக்களுக்கு புரியும் விதத்திலும் சட்டம் குறித்து எந்த தவறான செய்திகளையும் திணிக்காமல் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை விளக்கி இருந்தார். இதனால் இந்தப் படம் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

நடிகர் நானியின் எக்ஸ் தள பதிவு:

Also Read… வெளி நாடுகளில் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் கூலி – வைரலாகும் பதிவுகள்!

தமிழில் ரீமேக் செய்யப்படும் கோர்ட் ஸ்டேட் VS நோபடி:

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கோர்ட் ஸ்டேட் VS நோபடி படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளதாகவும் அவருடன் இணைந்து அவரது தந்தை தியாகராஜன் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தப் படத்தில் பிரபல தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் மகன் கிருத்திக் மற்றும் இயக்குநர் ராஜ்குமாரன் – நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா இருவரும் இந்தப் படத்தின் மூலம் நடிகர்களாக அறிமுகம் ஆக உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் எஸ்டிஆர் 49 படத்தின் ஷூட்டிங் எப்போது?