நானி தயாரிப்பில் வெளியான படத்தை புகழ்ந்து பேசிய விஜய் சேதுபதி
Actor Vijay Sethupathi: தெலுங்கு சினிமாவில் நடிகர் நானியின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் கோர்ட். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படம் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடிப்பில் கடந்த 23-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ஏஸ். இந்தப் படத்தை இயக்குநர் ஆறுமுகக் குமார் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தை ஆறுகுமக் குமாரே தயாரிக்கவும் செய்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை ருக்மணி நாயகியா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் யோகி பாபு, பப்லு பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்ட விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
அந்தப் பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு சினிமாவில் நடிகர் நானியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த கோர்ட் ஸ்டேட் VS நோபடி படத்தை பார்த்தது குறித்து பேசினார். மேலும் அந்தப் படத்தின் கதை மற்றும் நடிகர்கள் நடிப்பை வெகுவாகப் பாராட்டி நடிகர் விஜய் சேதுபதி பேசியிருந்தார்.
நடிகர் விஜய் சேதுபதியின் எக்ஸ் தள பதிவு:
When GALATTA peaked🔥
Watch a DRAMA-fied ACTION scene from #ACE now!Ticket Link: https://t.co/r0BfgHSRRB
@VijaySethuOffl @rukminitweets @7CsPvtPte @Aaru_Dir @iYogiBabu @justin_tunes @samcsmusic @shreyaghosal @KapilKapilan_#KaranBRawat pic.twitter.com/zJNFcnyAkt— 7Cs Entertaintment (@7CsPvtPte) May 25, 2025
நடிகர் நானியின் தயாரிப்பில் ஹிட் அடித்த கோர்ட் படம்:
தெலுங்கு சினிமாவில் கடந்த 14-ம் தேதி மார்ச் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கோர்ட். இந்தப் படத்தை இயக்குநர் ராம் ஜகதீஷ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருடன் இணைந்து நடிகர்கள் பி.சாய் குமார், சிவாஜி, ரோகினி, ஹர்ஷ வர்தன், சுபலேகா சுதாகர், ஹர்ஷ் ரோஷன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரும் நடித்து இருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாக நடிகர் நானி நிகழ்ச்சி ஒன்றில் கோர்ட் படத்தை நிச்சயமாக நீங்கள் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும்.
அப்படி உங்களுக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை என்றால் அடுத்ததாக எனது நடிப்பில் வெளியாகும் ஹிட் படத்தை நீங்கள் யாரும் பார்க்க வேண்டாம் என்று தெரிவித்தார். இது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதே போல படம் பார்த்தவர்களும் நானி கூறியது போல படம் சிறப்பாக இருந்தது என்றும் பாராட்டினர்.
கோர்ட் படத்தின் கதை என்ன?
இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக போக்சோ சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டம் பலருக்கு நன்மை பயக்கும் விதமாக இருந்தாலும் சிலர் இந்த சட்டத்தை எவ்வாறு தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்தப் படம் தெளிவாக விவரித்து இருந்தது.
படத்தில் இயக்குநர் மிகவும் தெளிவாக மக்களுக்கு புரியும் விதத்திலும் எந்தவித திணிப்பும் இல்லாமல் அழகாக இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை விளக்கி இருந்தார். படத்தில் நடித்த நடிகர்களும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.