Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இட்லி கடை ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களுக்கு நடிக்க சொல்லித்தரும் தனுஷ் – வைரலாகும் வீடியோ!

Idly Kadai Movie: நடிகர் தனுஷ் தற்போது இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்தப் படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இட்லி கடை படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் தனுஷ் மற்ற நடிகர்களுக்கு காட்சிகளை நடித்துக் காட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இட்லி கடை ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களுக்கு நடிக்க சொல்லித்தரும் தனுஷ் – வைரலாகும் வீடியோ!
இட்லி கடைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jul 2025 16:35 PM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் இட்லி கடை. இந்தப் படத்தை நடிகர் தனுஷே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் (Actress Nithya Menon) நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அருண் விஜய், சத்யராஜ், ஷாலினி பாண்டே,  பார்த்திபன், ராஜ்கிரண் மற்றும் சமுத்திரக்கனிஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படம் முன்னதாக ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாவதாக படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் வெளிநாட்டில் சில முக்கிய காட்சிகள் படத்திற்காக எடுக்கப்பட உள்ளதாகவும் அது முடிவடையாத காரணத்தால் படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து படம் வருகின்ற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருந்தது.

அதன்படி படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று இட்லி கடை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் டாக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்து உள்ளது குறிப்பிடத்தகது.

இணையத்தில் கவனம் பெரும் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்:

நடிகர்கள் தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இட்லி கடை படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தில் இருந்து என்ன சுகம் என்ற சிங்கிளை நேற்று 27-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு படக்குழு வெளியிட்டு இருந்தது.

இந்த சிங்கிள் வீடியோவில் நடிகர் தனுஷ் தனது படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தது. இந்த பாகத்தை மட்டும் எடிட் செய்து தனுஷின் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றது. இது தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பள்ளியில் இருந்தே நானும் சைந்தவியும் நல்ல நண்பர்கள் – ஜிவி பிரகாஷ் குமார்

இணையத்தில் வைரலாகும் இட்லி கடை பட வீடியோ:

Also Read… வழக்கமான அதே டெம்லேட் உடன் சித்தர்களின் சக்தியும் இணைந்து உருவானது மார்கன் – அமேசானில் வெளியான படம் எப்படி இருக்கு?