Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rukmini Vasanth : சியான் விக்ரமிற்கு ஜோடியாகும் ஏஸ் பட நடிகை.. எந்த படத்தில் தெரியுமா?

Rukmini Vasanth And Vikram Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சியான் விக்ரம். இவரின் நடிப்பில் சியான் 63 மற்றும் சியான் 64 என இரு படங்கள் உருவாக்கி வருகிறது. இந்நிலையில், நடிகர் சியான் விக்ரமிற்கு ஜோடியாக விஜய் சேதுபதியின் ஏஸ் பட நடிகை ருக்மினி வசந்த் நடிக்கவுள்ளாராம். எந்த படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Rukmini Vasanth : சியான் விக்ரமிற்கு ஜோடியாகும் ஏஸ் பட நடிகை.. எந்த படத்தில் தெரியுமா?
ருக்மிணி வசந்த் மற்றும் விக்ரம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 27 Jul 2025 20:50 PM

நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) நடிப்பே தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் வீர தீர சூரன் (Veera Dheera Sooran). இந்தப் படமானது முற்றிலும் அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காதல் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்தப் படமானது கடந்த 2025, மார்ச் மாதத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் விக்ரம், சியான்63 (Chiyaan63) மற்றும் சியான் 64 (Chiyaan64)என இரு படங்கள் உருவாகிவருகிறது. இதில் சியான்63 படத்தை, சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் (madonne ashwin) இயக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகளும் சமீபத்தில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக 96 பட இயக்குநர் பிரேம் குமாருடன் (C Prem kumar) ஆக்ஷ்ன் திரில்லர் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சியான் விக்ரமிற்கு, நடிகை ருக்மினி வசந்த் (Rukmini Vasanth ) ஜோடியாக நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் இயக்குநர் சி பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சியான்64 திரைப்படத்தில், ருக்மினி வசந்த் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தனுஷின் குரலில்.. இட்லி கடை படத்தின் முதல் பாடல் ‘என்ன சுகம்’ வெளியீடு!

ருக்மினி வசந்த்தின் தமிழ் படங்கள் :

நடிகை ருக்மிணி வசந்த் தமிழில் நடிகர் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு மே இறுதியில் வெளியாகியிருந்தது. இப்படமானது திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாவிட்டாலும், ஓடிடியில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் மதராஸி திரைப்படத்திலும், முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க : படம் நல்லா இல்லனாலும் பெரிய நடிகர் நடிச்சா கமர்ஷியல் படம் ஹிட் அடிக்கும் – லோகேஷ் கனகராஜ்!

இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் வெளியாகவுள்ளது. இப்படங்களை அடுத்ததாகத் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை அடுத்ததாகதான் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாகச் சியான்64 படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகை ருக்மிணி வசந்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Rukmini Vasanth (@rukmini_vasanth)

96 பட இயக்குநர் சி பிரேம் குமார், மெய்யழகன் திரைப்படத்தை அடுத்ததாக நடிகர் விக்ரமுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படமானது தற்போது சியான்64 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில், படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது, இந்த படத்தில்தான் நடிகை ருக்மிணி வசந்த கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகளை இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.