லெவன் பட நடிகர் நவீன் சந்திராவின் புதுப் படம் குறித்த அறிவிப்பு – வைரலாகும் இன்ஸ்டா பதிவு
Actor Naveen Chandra: தெலுங்கு சினிமாவில் பல சிறந்த படங்களில் நடித்தவர் நடிகர் நவீன் சந்திரா. முன்னதாக இவர் சில தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும் சமீபத்தில் வெளியான லெவன் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களிடையே நன்கு பிரபலமானார் நடிகர் நவீன் சந்திரா.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் தெலுங்கு சினிமாவில் நடிகராக வலம் வருபவர் நடிகர் நவீன் சந்திரா (Actor Naveen Chandra). இவர் தெலுங்கு மொழியில் மட்டும் இன்றி தமிழ் மொழியிலும் தொடர்ந்து பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடிகர் நவீன் சந்திரா நடித்து இருந்தாலும் அவரது நடிப்பில் கடந்த மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான லெவன் படம் தான் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான இந்தப் படம் பான் இந்திய ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடையே நவீன் சந்திரா நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




நவீன் சந்திராவின் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் இன்ஸ்பெக்டர் ரிஷி சீசன் 2:
இந்த நிலையில் நடிகர் நவீன் சந்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் முன்னதாக நடித்த இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணையதள தொடரின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு குறித்து வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக ஒளிபரப்பான சீரிஸ் இன்ஸ்பெக்டர் ரிஷி. இந்த இணையதள தொடரை இயக்குநர் நந்தினி இயக்கி இருந்தார். இதில் நடிகர் நவீன் சந்திரா உடன் இணைந்து நடிகர்கள் சுனைனா, கண்ணா ரவி, ஸ்ரீகிருஷ்ண தயாள், மாலினி ஜீவரத்தினம் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹாரட் க்ரைம் ட்ராமாவை மையமாக கொண்டு வெளியான இந்த இணையள தொடர் 10 எபிசோடுகளை கொண்டிருந்தது. இந்த தொடர் தமிழில் உருவாக்கப்படு வெளியாகி இருந்தது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த இணையதள தொடரின் இரண்டாவது சீசன் தொடர்பான அறிவிப்பை தற்போது நடிகர் நவீன் சந்திரா வெளியிட்டு இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் கவனம் பெரும் நடிகர் நவீன் சந்திராவின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram