தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!
Kingdom Movie Release: கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த சில மாதங்களாக தூக்கமில்லாமல் சிரமத்திற்குள்ளானதாகவும், தற்போது இந்தப் படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பால் நிம்மதியாக தூங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா (Vijay Devarakonda) நடிப்பில் உருவாகியுள்ள படம் கிங்டம் (Kingdom) திரைப்படம் வருகிற ஜூலை 31, 2025 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானதற்கு பிறகு இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அனிருத் (Anirudh) இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பதால் தமிழ் ரசிகர்களும் இந்தப் படத்துக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜெர்சி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த, கௌதம் தின்னனுரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கிங்டம் திரைப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள், பாடல்கள், டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கின்றன.
வித்தியாசமான தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா
குறிப்பாக விஜய்யின் தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. விஜய் மொட்டையடித்த தலையுடன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். டிரெய்லர் இந்தப் படம் பக்கா ஆக்சன் எண்டர்டெயினராக இருக்கும் என்பதை நமக்கு சொல்கிறது. சமீபத்தில் கிங்டம் திரைப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதையும் படிக்க : விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்துக்கு மாஸ் ஓபனிங்.. வெளிநாட்டு டிக்கெட் புக்கிங்கில் சாதனை!
கிங்டம் படம் தொடர்பாக விஜய் தேவரகொண்டா பதிவு
Suri is filled with Rage.
But, me –
Today i am actually calm and content.
Because of your love 🥰Biggest hugs and love to all of you,
See you in the cinemas tomorrow ❤️#Kingdom https://t.co/vWnzGf6N6R pic.twitter.com/8QP8vcMzsk— Vijay Deverakonda (@TheDeverakonda) July 30, 2025
இதையும் படிக்க : இன்னொரு அர்ஜூன் ரெட்டியா? விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விழாவில் பேசிய விஜய் தேவரகொண்டா, “கடந்த சில மாதங்களாக நான் தூக்கமில்லாமல் மிகவும் அவதிப்பட்டேன். இப்போது நான் நிம்மதியாகத் தூங்குகிறேன். இந்த முன்பதிவுகள் அனைத்தும் மக்கள் கொடுத்த அன்பு. இப்போது எல்லோரும் படம் நிச்சம் வெற்றிபெறும் என சொல்வதைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறேன், எங்கள் முழு குழுவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியுடனும் இருக்கிறோம். ஒவ்வொரு படமும் உருவாவதற்கு இயக்குநர்கள் தான் காரணம். நாங்கள் அதில் ஒரு பகுதி தான். அர்ஜூன் ரெட்டியின் வெற்றி சந்தீப் ரெட்டி வங்காவையே சேரும். அதே போல கிங்டம் படத்திற்கு 100 சதவிகிதம் இயக்குநர் கௌதம் தான் காரணம். அவர் தான் கேப்டன் என்று தெரிவித்தார்.
இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். பிரபல நடிகர் சத்ய தேவ் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.