Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எனக்கு அந்த நடிகையோட நடிக்கனும் பயங்கர ஆசை – சிம்பு சொன்ன நடிகை யார் தெரியுமா?

Actor Silambarasan: கோலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய சிலம்பரசன் அந்த பிரபல நடிகையுடன் நடிக்க விருப்பம் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எனக்கு அந்த நடிகையோட நடிக்கனும் பயங்கர ஆசை – சிம்பு சொன்ன நடிகை யார் தெரியுமா?
சிம்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jul 2025 17:15 PM

கோலிவுட் சினிமாவில் நாயகனாக நடிக்க உருவமும் அழகும் தேவையில்லை நல்ல திறமை இருந்தால் போதும் என்று சாதித்துக் காட்டியவர்தான் டி.ராஜேந்திரன் (T Rajendran). இவர் இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என இவர் கால் தடம் பதியாத துறை சினிமாவில் இல்லை என்றே சொல்லலாம். அப்படி இருக்கையில் நடிகர் டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிலம்பரசன் (Actor Silambarasan) அவரது படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அப்போது குட்டி சிம்பு தனது மழலை மாறாத குரலில் பேசிய வசனங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படி குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நடிகர் சிம்பு நாயகனாக அறிமுகம் ஆன பிறகும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெறத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தந்தையை போல நடிகர் சிலம்பரசனும் நாயகனாக மட்டும் இன்றி பாடகர், பாடலாசிரியர் என சினிமாவில் பலத் துறைகளில் சாதித்து வருகிறார். அதே போல நடிகர் சிம்புவின் நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம் இருப்பது போல அவரது நடத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.

இடையில் சில ஆண்டுகள் நடிகர் தனுஷிற்கு சிறப்பான ஆண்டாகா சினிமாவில் அமையவில்லை. தொடர்ந்து படங்கள் தோல்வி எடை அதிகரித்து குண்டாக இருப்பது போன்று பல விமர்சங்களை எதிர்கொண்ட சிம்பு தனது உடல் எடையை குறைத்து சினிமாவில் கம்பேக் கொடுத்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து. அதனைத் தொடர்ந்து தற்போது பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

நடிகர் சிம்பு இணைந்து நடிக்க விரும்பிய நடிகை யார்?

இந்த நிலையில் நடிகர் சிம்பு முன்னதாக அளித்தப் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. அந்தப் பேட்டியில் நடிகர் சிம்பு தனக்கு நடிகை ஜோதிகா உடன் இணைந்து நடிக்க விருப்பம் என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகை ஜோதிகாவின் நடிப்பில் வெளியான பூவ பூவ பூவே பாடலைப் பார்த்தப் போது யார்ரா இந்த பொண்ணு ஒரே பாட்டுல இத்தன எக்ஸ்பிரஷன் கொடுக்குறாங்க என்று பிரமித்தகாவும் தெரிவித்து இருந்தார்.

Also read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது மாமன் படக்குழு… எப்போது தெரியுமா?

அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிகை ஜோதிகா உடன் இணைந்து மன்மதன் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிம்புவின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு:

Also read… தளபதி விஜய் இல்லாமல் எல்சியு முழுமையடையாது… ஆனால் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!