இந்திய சினிமாவின் லக்கி நாயகன் துல்கர் சல்மானுக்கு ஹேப்பி பர்த்டே
Actor Dulquer Salmaan: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள சினிமா மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து நாயகனாக பல ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் மம்முட்டியின் மகன் தான் நடிகர் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan). இவர் கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி 1983-ம் ஆண்டு பிறந்தார். இன்று தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகர் துல்கர் சல்மானுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது நடிகர் துல்கர் சல்மான் புதிதாக நடித்து வரும் படங்களின் அப்டேட்களும் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இந்தப் புதுப் படங்களின் அப்டேட்களைப் பார்த்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் துல்கர் சல்மான் தற்போது தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என்று 3 மொழிகளில் படங்களில் வரிசையாக நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் நடிகர் மம்முட்டியின் மகனாக நடிகர் துல்கர் சல்மான் அறிமுகம் ஆனப் படம் செகண்ட் ஷோ. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடந்து கடந்த 2015-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் அறிமுகம் ஆன இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.




துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் காந்தா படத்தின் டீசர் அப்டேட்:
Celebrate the golden age of silver screens with us. Watch the first teaser of @kaanthamovie, out now on YouTube.
Tamil – https://t.co/cw22pT1TKn
Telugu – https://t.co/UWvc334e7x
A @SpiritMediaIN and @DQsWayfarerFilm production.#Kaantha #DulquerSalmaan #RanaDaggubati… pic.twitter.com/OtzXRs9JTG
— Spirit Media (@SpiritMediaIN) July 28, 2025
பான் இந்திய அளவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் துல்கர் சல்மான்:
தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் அறிமுகமான முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனப் படம் மஹாநதி. இந்தப் படம் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிகர் ஜெமினி கணேஷனாக நடித்து பாராட்டைப் பெற்றார்.
இந்திய சினிமாவில் லக்கி நாயகனாக இருக்கும் நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தொடர்ந்து வெளியாகும் அனைத்துப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லக்கி பாஸ்கர்.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தெலுங்கு மொழியில் உருவான இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் வெளியானது. கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான லக்கி பாஸ்கர் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… Nithya Menen : சிங்கிளாக நிம்மதியாக வாழ்கிறேன்.. – நித்யா மேனன்!