திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!
Thalaivan Thalaivii Movie: நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathy) நாயகனாகவும் நடிகை நித்யா மேனன் (Actress Nithya Menon) நாயகியாகவும் நடித்து கடந்த 25-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பல சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தலைவன் தலைவி படத்தையும் குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்தே இயக்குநர் பண்டிராஜ் இயக்கியுள்ளார். திரையரங்குகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த தலைவன் தலைவி படம் தற்போது உலக அளவில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் உடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, காளி வெங்கட், தீபா, ரோஷ்ணி ஹரிப்பிரியன், மைனா நந்தினி, ஆர்.கே.சுரேஷ், செம்பன் வினோத் ஜோஸ், சரவணன், அருள் தாஸ், வினோத் சாகர் மற்றும் செண்ட்ராயன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.




தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
சிவகங்கையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் விஜய் சேதுபதிக்கும், சாப்பாடு என்றாலே சந்தோஷமாகும் நடிகை நித்யா மேனனுக்கும் திருமணம் நடைபெறுகின்றது. ஜாலியாக திருமண வாழ்க்கையில் இருக்கும் இவர்களுக்கு பொதுவாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நடக்கும் ஊடல்களும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.
மேலும் திருமணம் காரணமாக இணையும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே இருக்கும் பாசம் மற்றும் மோதல் என இந்த சமூகத்தில் வழக்கமான நிகழ்வுகளைக் கொண்டு இயக்குநர் பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் பல காட்சிகள் ரசிகர்களுக்கு தங்கள் சொந்த வாழ்க்கையுடன் ஒத்துப்போவதால் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
Also Read… படத்திற்காக புது விசயத்தைக் கற்றுக்கொண்ட நடிகை மிருணாள் தாக்கூர் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
இந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது இருக்கும் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி படம் வெளியாகி 6 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் ஓடிடியில் வெளியாகளாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
இணையத்தில் கவனம் பெரும் தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#ThalaivanThalaivii storms past £100K; fastest-ever VJS film to achieve this at the UK box office! 🙌♥️
Exceptional weekday hold as families continue to show big love. On course to become Vijay Sethupathi’s ALL-TIME TOP UK grosser — yet another star’s career-best delivered by… pic.twitter.com/3gimBC9t5T
— Ahimsa Entertainment (@ahimsafilms) July 30, 2025