Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கல்யாணி பிரியதர்ஷன் – நஸ்லேன் நடிப்பில் வெளியானது லோகா படத்தின் டீசர்!

Lokah - Chapter 1 - Chandra | நடிகை கல்யாணி பிரியதரிஷன் மற்றும் நடிகர் நஸ்லேன் நடிப்பில் உருவாகி வருகின்றது லோகா படம். சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து வருகின்றார்.

கல்யாணி பிரியதர்ஷன் – நஸ்லேன் நடிப்பில் வெளியானது லோகா படத்தின் டீசர்!
லோகாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jul 2025 12:55 PM

பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan). மலையாள சினிமாவில் நாயகியாக பலப் படங்களில் நடித்த இவர் தற்போது தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து உருவாகி வரும் லோகா சாப்டர் 1 சந்திரா என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேன் (Naslen) நாயகனாக நடித்து வருகிறார். இவர் முன்னதாக பிரேமலு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உட்பட தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் லோகா படத்தின் டீசர் நேற்று 28-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகியுள்ளது.

இயக்குநர் டாம்னிக் அருண் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தை நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபர் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து வருகிறார்.

இணையத்தில் கவனம் பெரும் லோகா சாப்டர் 1 படத்தின் டீசர்:

இந்த நிலையில் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்குதான் அந்த சூப்பர் ஹீரோ பவர் இருப்பதாக டீசரைப் பார்க்கையில் தெரிகிறது. பிறக்கும் போதே அவருக்கு அந்த பவர் இருப்பதாகவும் வளர வளர அவர் அதனை உணர்வது போலவும் அந்த டீசரில் காட்டப்பட்டுள்ளது. இந்த டீசர் பார்த்த ரசிகர்கள் இந்திய சினிமாவில் அதுவும் மலையாள சினிமாவில் இப்படி சூப்பர் ஹீரோ கதைகள் வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக மலையாள சினிமாவில் நடிகரும் இயக்குநருமான பேசில் ஜோசஃப் இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து வெளியான படம் மின்னல் முரளி. இதில் நாயகனுக்கு மின்னல் தாக்கியதால் அவருக்கு அபரிமிதமான சக்தி கிடைத்ததுபோல இயக்குநர் பேசில் ஜோசஃப் அந்தப் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் உலக அளவில் பல விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது லோகா இணையும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read… மோனிகா பாடலுக்கு முதலில் டான்ஸ் ஆட ஷௌபின் ஷாகீர் பயந்தார் – நடன இயக்குநர் சாண்டி

லோகா படத்தின் டீசர் குறித்து துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இட்லி கடை ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களுக்கு நடிக்க சொல்லித்தரும் தனுஷ் – வைரலாகும் வீடியோ!