Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க மறுத்த நடிகர் நஸ்லேன்… காரணம் என்ன தெரியுமா?

Naslen Said No To Good Bad Ugly: நஸ்லேன் இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் 2019-ம் ஆண்டு வெளியான தண்ணீர் மதன் தினங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இதில் மேத்திவ் தாமஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து வாரனே ஆவேஷமுண்டு, குருதி ஹோம், சூப்பர் ஷரண்யா, ஜோ அண்ட் ஜோ, நெய்மர் ஆகிய படங்களில் இரண்டாவது நாயகனாகவே நடித்து வந்தார்.

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க மறுத்த நடிகர் நஸ்லேன்… காரணம் என்ன தெரியுமா?
நஸ்லேன், அஜித்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Apr 2025 16:10 PM

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்ததாக நடிகர் நஸ்லேன் (Naslen) தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான காரணத்தையும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிசந்திரன் அஜித்தின் முந்தைய படங்களின் பல காட்சிகளை மறு உருவாக்கம் செய்துள்ளார். அஜித் குமாரின் விண்டேஜ் படங்கள் முதல் சமீபத்தில் வெளியான படங்கள் வரை பல படங்களின் ரெஃபரன்ஸ்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தது. அஜித் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருந்தாலும் மற்றவர்கள் படத்தின் மீது சில விமர்சனத்தையும் வைத்தனர்.

படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் வசூலில் நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது. பிரேமலு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நஸ்லேன். இந்தப் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்களை தென்னிந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ஆலப்புழா ஜிம்கானா படம். இயக்குநர் காலித் ரகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான தள்ளுமாலா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.

12-ம் வகுப்பு பொத் தேர்வில் தோல்வி அடையும் நண்பர்கள் குழு கல்லூரியில் ஸ்போர்ஸ்ட் கோட்டாவில் சேர்வதற்காகா முடிவு செய்து அதற்காக பாக்ஸிங்கை தேர்ந்தெடுக்கின்றனர். அதில் அவர்கள் வெற்றிப் பெற்றார்களா கல்லூரியில் சேர்ந்தார்களா என்பதே படத்தின் கதை. காமெடி ட்ராமாவாக உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் படத்தின் நடிக்கும் வாய்பு கிடைத்தபோது அதனை மறுத்துவிட்டதாக பிரபல மலையாள நடிகர் நஸ்லேன் வெளிப்படையாக பேசியுள்ளார். மாத்ரபூமி செய்திக்கு நடிகர் நஸ்லேன் ஒரு பேட்டியளித்தார். அதில், ​ ”குட் பேட் அக்லி படத்தில் நடிக்க படக்குழு என்னை அணுகினர்.

ஆனால் அந்த நேரத்தில், நான் ஆலப்புழா ஜிம்கானா படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அதனால் நடிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு மகனாக நடிக்க நஸ்லேனிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்தப் கதாப்பாத்திரத்தில் தற்போது சலார் பட நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். இவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது குறிப்பிடதக்கது.