டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், இந்திய ரயில்வே தனது முதல் எல்என்ஜி மற்றும் டீசல் இரட்டை எரிபொருள் டெமு ரயிலை அறிமுகம் செய்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள சபர்மதி பகுதியில், இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டெமு ரயில் தற்போது பயணிகள் சேவையில் இயக்கப்பட்டு வருகிறது. 1,400 ஹார்ஸ் பவர் திறன் கொண்ட இந்த டெமு ரயிலில், திரவ இயற்கை எரிவாயு எனப்படும் எல்என்ஜி பயன்படுத்தப்படுகிறது.