Retta Thala : அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ திரைப்படம்.. வெளியான சூப்பர் அப்டேட் இதோ!
Retta Thala Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அருண் விஜய். இவரின் நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ரெட்ட தல. இந்த படத்திலிருந்து தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அருண் விஜய் (Arun Vijay). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வணங்கான் (Vanangaan) திரைப்படமானது வெளியானது. இயக்குநர் பாலா (Bala) இயக்கத்தில் வெளியான இப்படமானது மக்களிடையே ஓரளவு வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் அருண் விஜய் தொடர்ந்து, இட்லி கடை போன்ற புதிய படங்களில் ஒப்பந்தமானார். அதில் வித்தியாசமான கதைக்களம் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் ரெட்ட தல (Retta Thala). இந்த படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் (Krish thirukumaran) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கெத்து மற்றும் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களைத் தொடர்ந்து, நடிகர் அருண் விஜய்யுடன் இந்த ரெட்ட தல படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்யின் ஜோடியாக நடிகை சித்தி இத்னானி (Siddhi idnani) நடித்துள்ளார்.
மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்திலிருந்து முக்கிய அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தின் மியூசிக் ரைட்ஸை டி- சீரிஸ் (T-Series) என்ற நிறுவனமானது பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : தனுஷின் பிறந்தநாளில் வெளியான ‘இட்லி கடை’ படத்தின் புதிய போஸ்டர்!
ரெட்ட தல படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அறிவிப்பு :
Retta Thala. One Soundtrack. Infinite Power.
The Pan-Indian powerhouse @tseriessouth bags the audio rights of @arunvijayno1 ‘s #RettaThala! 💥@SamCSmusic brings the heat – stay tuned for an explosive musical journey. 🎵Produced By- @bbobby @BTGUniversal
Directed By-… pic.twitter.com/aMfT6WiYJn
— BTG Universal (@BTGUniversal) July 28, 2025
ரெட்ட தல திரைப்படத்தின் நடிகர்கள் :
இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் தான்யா ரவிசந்திரன், ஹரீஷ் பேரடி, யோக ஜாபி, பாலாஜி முருகதாஸ், ஜான் விஜய் மற்றும் நிதிஷ் நிர்மல் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது மாறுபட்ட கதையில் உருவாகியுள்ளதாம்.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் மதராஸி.. முதல் பாடல் புரோமோ குறித்து வெளியான அறிவிப்பு!
ரெட்ட தல படத்தின் ரிலீஸ் எப்போது :
அருண் விஜய்யின் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸில் சில பிரச்னைகள் எழுந்த காரணத்தால் இன்று வரையிலும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், தற்போது இப்படமானது வெளியீட்டிற்குத் தயாராகிவருவதாகக் கூறப்படும் நிலையில், படத்தின் இசை ரைட்ஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தைப் படக்குழு வரும் 2025 அக்டோபர் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.