வெற்றிகரமாக திரையரங்குகளில் 25 நாட்களை நிறைவு செய்த பறந்து போ படம் – வைரலாகும் பதிவு
Paranthu Po Movie: நடிகர் மிர்ச்சி சிவா நட்டிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் பறந்து போ. இந்தப் படம் தற்போது 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு சிவா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா நாயகனாகவும் நடிகை அஞ்சலி நாயகியாவும் நடித்து வெளியான படம் கற்றது தமிழ். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் ராம் (Director Ram). உலகமயமாக்களை மையமாக வைத்து இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான இந்த கற்றது தமிழ் படம் தமிழக மக்கள் இடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். மனித உணர்வுகளை மையமாக வைத்து படங்களை இயக்கும் ராம் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான தங்க மின்கள், தரமணி மற்றும் பேரன்பு ஆகிய படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக பெரும் பாராட்டைப் பெற்றது. தங்க மீன்கள் மற்றும் பேரன்பு ஆகிய படங்களில் அப்பா மகள் பாசத்தை மிகவும் அழகாகக் காட்டியிருப்பார்.
மேலும் இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை படம் வெளி நாடுகளில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் கடந்த 4-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு பறந்து போ படம் திரையரங்குகளில் வெளியானது.




திரையரங்குகளில் வெற்றிநடை போடும் பறந்து போ படம்:
இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்து இருந்தார். மேலும் நடிகை கிரேஷ் ஆண்டனி இந்தப் படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். இவர் மலையாளத்தில் வெளியான கும்பளங்கி நைட்ஸ் போன்ற பல ஹிட் படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் இணைந்து இந்த பறந்து போ படத்தில் நடிகர்கள் அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் ஏசுதாஸ், பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் முழுக்க தற்போது இருக்கும் இளம் பெற்றோர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை மையமாக வைத்து காமெடி செண்டிமெண்டாக வெளியாகி இருந்தது.
Also Read… வெளி நாடுகளில் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் கூலி – வைரலாகும் பதிவுகள்!
படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே இருந்து பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் 25 நாட்களை கடந்துள்ளது குறித்து நட்டிகர் சிவா தனது எக்ஸ் தள பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
25 days and still soaring! #ParanthuPo continues flying high in theatres near you. Thanks for ur love ⭐️⭐️⭐️❤️❤️❤️#graceantony @yoursanjali @AjuVarghesee @iamvijayyesudas @eka_dop @DhayaSandy @madhankarky @edit_mathi @silvastunt @mynameisraahul @Romeopictures_ @thinkmusicindia… pic.twitter.com/Y91P2r4KNY
— Shiva (@actorshiva) July 28, 2025
Also Read… சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் எஸ்டிஆர் 49 படத்தின் ஷூட்டிங் எப்போது?