காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!
Madhura Manohara Moham: சினிமாவில் பல ஜானர்களில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக காமெடி ஜானரில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படி மலையாள சினிமாவில் வெளியான ஒரு சிறந்த காமெடி படம் குறித்து தற்போது பார்க்கலாம்.

மலையாள சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷரஃப் உ தீன் (Actor Sharaf U Dheen). இவர் கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். தனது கடின உழைப்பால் தற்போது மலையாள சினிமாவில் சிறந்த நடிகர்களின் பட்டியளில் உள்ளார். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் ஷரஃப் உ தீன் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான மதுர மனோகர மோஹம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் பல ட்விஸ்ட்கள் இருந்தது ரசிகர்களுக்கே சர்ப்ரைசாக இருந்தது என்றே சொல்லலாம்.
அப்படி பல சர்ப்ரைஸ் நிறைந்த இந்த மதுர மனோகர மோஹம் படத்தில் நடிகர் ஷரஃப் உ தீன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் ரஜிஷா விஜயன், பிந்து பணிக்கர், ஆர்ஷா சாந்தினி பைஜு, விஜயராகவன், சைஜு குருப், ஷைன் டாம் சாக்கோ, அல்தாப் சலீம், மாலு மோகனாக மீனாட்சி வாரியர், பிஜு சோபானம், நிரஞ்ச் மணியன்பிள்ளை ராஜு, சுனில் சுகதா, அரவிந்த் எஸ்.கே, நீனா குருப் என பலர் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை ஸ்டெஃபி சேவியர் என்பவர் இயக்கி இருந்தார்.




மதுர மனோகர மோஹம் படத்தின் கதை என்ன?
மதுர மனோகர மோஹம் படத்தில் நடிகர் ஷரஃப் உ தீன் தந்தை உயிரிழந்த நிலையில் தனது தாய் பிந்து பணிக்கர் மற்றும் தனது தங்கைகள் ரஜிஷா விஜயன் மற்றும் மீனாட்சி வாரியர் உடன் வாழ்ந்து வருகிறார். நாயர் குடும்பத்தை சேர்ந்த இவர்கள் வெளி சமூகத்தில் அனைவருடனும் இணைந்து பழகினாலும் தங்களது குடும்பத்தில் நாயர் என்ற பெருமையைக் காக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் நடிகர் ஷரஃப் உ தீன் தான் காதலிக்கும் பெண் நாயர் என்பதை அறிந்தே காதலிப்பார்.
இந்த குடுப்பத்தில் ஷரஃப் உ தீன் சின்ன தங்கச்சி மீனாட்சி மட்டும் இது எல்லாம் பார்க்காமல் அனைவருடனும் சகஜமாக பழகுவார். இதன் காரணமாகவே இவர் வேறு ஜாதி அல்லது வேறு மதத்தில் உள்ள நபரை காதலித்து விடுவாலோ என்று ஷரஃப் உ தீன் மற்றும் அவரது அம்மாவிற்கு பயம் இருக்கும்.
ஆனால் ஷரஃப் உ தீன் தனது மூத்த தங்கையான ரஜிஷா விஜயன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருப்பார். அவர் நன்கு படிப்பவராக மட்டும் இல்லாமல் அவர்களின் குடும்பத்தையே வழி நடத்துபவராகவும் இருப்பார். இப்படி இருக்கும் சூழலில் ஷரஃப் உ தீன் உடன் பணிபுரியும் அவரது நண்பர் ரஜிஷாவிற்கு ஒரு காதலன் இருப்பதாக கூறியபோது ஷரஃப் உ தீன் மிகுந்த மன உழைச்சலுக்கு ஆளாகி விடுவார்.
பின்பு அந்த பையன் குறித்து விசாரிக்கையில் அவர் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்ததும் மேலும் ஷாக்காகி விடுவார். ஆனால் பையன் நல்லா படிச்சு நல்லா சம்பாதிக்கிறான் என்று தெரிந்த பிறகு தனது தங்கையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்த ஷரஃப் உ தீன் தனது தாயை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பார்.
ஷரஃப் உ தீன் தனது தங்கையின் காதல் குறித்து அறிய தங்கை ரஜிஷா விஜயன் படிக்கும் அதே கல்லூரியில் படிக்கும் தனது காதலியை வைத்து விசாரிக்க சொல்வார். அந்த பெண் விசாரித்து வந்து சொல்லும் போது கல்லூரியில் ரஜிஷா ஒரு இஸ்லாமிய பையனை காதலிப்பதாக கூறுவார். இதனைக் கேட்ட ஷரஃப் உ தீன் மீண்டும் அதிர்ச்சி அடைவார். இப்படி அடுத்தடுத்த ட்விட்ஸ்டுகள் நிறைந்துகொண்டே போகும் இந்தப் படம் காமெடியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.
நடிகர் ஷரஃப் உ தீன் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram