Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

54-வது படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட தனுஷ் – வைரலாகும் போட்டோ!

Dhanush 54 Movie: குபேரா படத்தின் வெளியீட்டிற்கு பிறகு தனுஷ் தமிழில் இட்லி கடை மற்றும் இந்தியில் தேரே இஸ்க் மெயின் படத்தில் பிசியாக நடித்து வந்த நிலையில் தற்போது தனது 54-வது படத்தின் படப்பிடிப்பு பணியில் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

54-வது படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட தனுஷ் – வைரலாகும் போட்டோ!
தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jul 2025 12:59 PM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. இந்தப் படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி இருந்தார். இதில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா (Actor Nagarjuna) மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தின் நடிகர் தனுஷ் பிச்சைக்காரராக நடித்து இருந்தார். படம் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் வெளியானது. தமிழ் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத இந்தப் படம் மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 52-வது படமான இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்து உள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல் ராய் உடன் இணைந்து தனது 53-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தேரே இஸ்க் மெய்ன் என்று பெயரிப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

54-வது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தனுஷ்:

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது 54-வது படத்திற்காக இயக்குநர் விக்னேஷ் ராஜா உடன் கூட்டணி வைத்துள்ளார். இவர் முன்னதாக நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த போர் தொழில் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ஃபேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தனுஷின் 54-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிவிட்டது என்று வெளியிட்டுள்ளது. இதனைத் பார்த்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

Also Read… படத்திற்காக புது விசயத்தைக் கற்றுக்கொண்ட நடிகை மிருணாள் தாக்கூர் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இணையத்தில் கவனம் பெறும் வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஃபிலிம்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… உங்களுக்கு ஆக்‌ஷன் த்ரில்லர் பிடிக்குமா? அப்போ நெட்ஃபிளிக்ஸில் இருக்கும் ஆஃபிசர் ஆன் டியூட்டி படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!