Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thalaivan Thalavii : வெளிநாடுகளில் வசூலைக் குவிக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம்.. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இதோ!

Thalaivan Thalavii Movie Overseas Collection : விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் முன்னணி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. இப்படமானது தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், வெளிநாடுகளிலும் மக்களிடையே வரவேற்பைப் பெற்ற வருகிறது. இந்நிலையில் 4 நாட்களில் வெளிநாடுகளில் தலைவன் தலைவி படம் வசூல் செய்த விவரம் குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

Thalaivan Thalavii : வெளிநாடுகளில் வசூலைக் குவிக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம்.. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இதோ!
தலைவன் தலைவி திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Jul 2025 16:12 PM

இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalavii). இந்த படத்தில் முன்னணி படத்தில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் நித்யா மேனன் (Nithya Menen) இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படமானது கடந்த 2025ம் ஜூலை 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்தப் படமானது முற்றிலும் பேமிலி எண்டர்டைனர் (Family entertainer) திரைப்படமாக வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படமானது ஆரம்பத்தில் விஜய் சேதுபதியின் 51வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் வெளியான இப்படத்திற்கு பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025, ஜூலை 25ம் தேதி முதல் இந்தியாவைத் தொடர்ந்து, இப்படமானது வெளிநாடுகளிலும் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் நான்கு நாட்கள் முடிவில் இந்த தலைவன் தலைவி திரைப்படமானது, வெளிநாடுகளில் மட்டும் சுமார் ரூ 10 கோடிகளை வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இந்த தருணம் எனக்கும் 3 BHK படத்திற்கும் நிறைய அர்த்தம் தருகிறது – இயக்குநர் ஸ்ரீ கணேஷ்!

வெளிநாடு வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு

நடிகர் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படமானது, மக்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்ற வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படமானது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதை அடுத்து, தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இப்படமானது எதிர்பார்த்ததாகிவிடவும் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் காம்போ மக்களிடையே வரவேற்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : சூர்யா அண்ணாவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் – விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சிப் பேச்சு!

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் நிலையில், இவரின் இசையமைப்பும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படமானது மொத்தமாக உலகளாவிய வசூலில், இதுவரை சுமார் ரூ 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் இப்படம் அதிகம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.