Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத்தின் புதிய படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!

Puri Jagannadh And Vijay Sethupathi Movie Update :தமிழில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் தெலுங்கில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் உருவாகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத்தின் புதிய படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!
பூரி ஜெகநாத் மற்றும் விஜய் சேதுபதி படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Jul 2025 22:53 PM

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பில், தமிழில் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழில் கதாநாயகனாகக் கலக்கிவரும் இவர், தெலுங்கிலும் ஹீரோவாகி புதிய படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்த புதிய திரைப்படத்தைத் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கிவருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் கடந்த 2025, மார்ச் மாதத்தில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, வாத்தி பட புகழ் நடிகை சம்யுக்தா மேனன் (Samyuktha Menon) நடித்து வருகிறார். மேலும் நெகடிவ் வேடத்தில் நடிகை தபு நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் 2025 ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் பூஜைகளுடன் தொடங்கியிருந்தது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் எப்போது என்பதைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தை வரும் 2025 டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் (Christmas) பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுவருவதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். இது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது. ஆனால் இந்த தகவல் குறித்துப் படக்குழு எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? குஷியில் ரசிகர்கள்!

விஜய் சேதுபதியின் தெலுங்கு பட ஷூட்டிங் தொடக்கப் புகைப்படம் :

விஜய் சேதுபதியின் இந்த தெலுங்கு திரைப்படமானது மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கவுள்ளதாம். இந்த படத்தில் விஜய் சேதுபதி பிச்சைக்காரன் வேடத்தில் நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை தபு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் தெலுங்கு திரைப்படமான இந்த புதிய திரைப்படம் தற்போது , “சேதுபதி X பூரி” என்று தற்காலிக டைட்டிலில் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய படத்தின் இசையமைப்பாளர் யாரை என்பதைப் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க : எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாள்.. கில்லர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாட்டம்!

தலைவன் தலைவி :

விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு கடத்திருக்கும் படம் தலைவன் தலைவி. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். இந்த படமானது முழுக்க குடும்பம் மற்றும் விவாகரத்து தொடர்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.