STR 49 படத்தின் புரோமோ வீடியோவை தியேட்டரில் வெளியிட திட்டமிடும் படக்குழு
STR 49 Movie Promo Update: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது ரசிகர்கள் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் படம் STR 49. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு இயக்குநர் வெற்றிமாறன் உடன் கூட்டணி வைத்து இருப்பதே அந்த கூடுதல் எதிர்பார்ப்பிற்கு காரணம் ஆகும்.

நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் படம் ஓடிடியில் வெளியான பிறகும் பல ட்ரோல்களை சந்தித்தது. தக் லைஃப் படத்திற்கு முன்னதாக நடிகர் சிலம்பரசன் தொடர்ந்து மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹிட் படங்களை கொடுத்த நிலையில் இடையில் தக் லைஃப் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக அடுத்ததாக சிலம்பரசன் தனது 49-வது படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் உடன் கூட்டணி வைத்திருப்பதாக அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இவர்கள் கூட்டணி நிச்சயம் ஹிட் அடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் படம் வடசென்னை படத்தின் இரண்டாவது பாகமாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் வடசென்னை படத்தில் காட்டப்படும் காலத்தில் தான் இந்தப் படம் இருக்கும். ஒரு பேரலல் யுனிவர்ஸ் போல ஆனால் இது வடசென்னை 2 கிடையாது. அன்புவின் எழுச்சி எப்போது தனுஷ் தான் என்றும் இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் அளித்து இருந்தார்.




தியேட்டரில் ரிலீஸாகும் STR 49 படத்தின் புரோமோ வீடியோ:
இந்த நிலையில் இந்தப் படத்தின் பணிகளில் முழுவதுமாக கவனம் செலுத்தி வருவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்து இருந்த நிலையில் STR 49 படத்தின் புரோமோ வீடியோ குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி STR 49 படத்தின் புரோமோ வீடியோவைப் படக்குழு முதலில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
திரையரங்குகளில் வெளியான பிறகே யூடியூபில் வெளியிட STR 49 படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இந்த புரோமோ வெளியிடு ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டில் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இணையத்தில் கவனம் பெறும் STR 49 புரோமோ குறித்த எக்ஸ் தள பதிவு:
#STR49 team is planning to release the promo directly on Theatres before YouTube release 🔥
Might release on Aug 2nd/3rd week & will be played along with #Coolie in theatres🤝#SilambarasanTR – #Vetrimaaran pic.twitter.com/ohOasvsFsU
— AmuthaBharathi (@CinemaWithAB) July 30, 2025
Also Read… டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட பிரச்னை – இயக்குநர் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்