Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

Power Star Srinivasan: தமிழ் சினிமாவில் தன்னை ஹீரோ என்று கூறிக்கொண்டு காமெடியில் கலக்கி வந்தவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். மருத்துவரான இவர் நடிகராக வேண்டும் என்பதற்காக சினிமாவில் அறிமுகம் ஆகி தனுக்கு தானே பவர் ஸ்டார் என்ற அடைமொழியையும் வைத்துக்கொண்டார்.

பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jul 2025 17:59 PM

தமிழ் சினிமாவில் நடிகர் சந்தானத்துடன் (Actor Santhanam) இணைந்து நடித்து பிரபலம் ஆனவர் பவர் ஸ்டார் சீனிவாசன் (Actor Power Star Srinivasan). அடிப்படையில் மருத்துவரான இவர் நடிப்பு மீது இருந்த ஆர்வம் காரணமாக நடிகராக மாறினினார். தான் நடிக்கும் படங்களை அவரே தயாரிக்கவும் செய்தார். சமீப காலமாக படங்களில் இவர் பெரிய அளவில் தோன்றவில்லை என்றாலும் அவ்வபோது ஏதாவது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ரூபாய் 1000 கோடி கடன் பெற்றுத்தருவதாக கூறி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் டெல்லியின் பொருளாதார குற்றப்பிரிவால் (Economic Offences Wing – EOW) கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். மேலும் விசாரணையில் இதுபோன்ற மோசடி வழக்குகள் முன்பே அவர் மீது இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி தற்போது பரவி இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… துல்கர் சல்மான் நடிப்பில் இறுதியாக வெளியான லக்கி பாஸ்கர் படத்தை தியேட்டரில் மிஸ் பண்ணிடீங்களா? அப்போ நெட்ஃபிளிக்ஸில் கண்டிப்பா பாருங்க

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் சினிமா பயணம்:

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான முதல் தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் 2011-ம் ஆண்டு நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படம் இவரை தமிழகத்தில் உள்ள பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒன்பதுல குரு, யா யா, வல்லவனுக்கு புள்ளும் ஆயுதம், வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா என தொடர்ந்து சந்தானத்துடன் இணைந்து நடித்த இவரது காமெடி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்துள்ள கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… உங்களுக்கு ஆக்‌ஷன் த்ரில்லர் பிடிக்குமா? அப்போ நெட்ஃபிளிக்ஸில் இருக்கும் ஆஃபிசர் ஆன் டியூட்டி படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!