STR 49 : சிலம்பரசன் – சந்தானம் கூட்டணி.. ‘எஸ்டிஆர் 49’ படம் கைவிடப்பட்டதா?
Silambarasans STR49 Movie : நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் குழந்தைப் பருவத்திலிருந்தே படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தக் லைஃப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து STR 49 படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் அப்படம், கைவிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

கோலிவுட் சினிமாவில் பார்க்கிங் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan). இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் முன்னணி நாயகனாக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தில் வெற்றியைத் தொடர்ந்து இவரின் இயக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்த படம் STR 49. நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) முன்னணி நடிப்பில் இந்த படமானது உருவாக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் உருவாகவிருந்த இப்படத்தை, டான் பிக்ச்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனத்தின் கீழ் ஆகாஷ் பாஸ்கரன் (Aakash Bhaskaran) தயாரிக்கவிருந்தார். இந்நிலையில், இந்த STR49 படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2025, ஏப்ரல் இறுதியில் நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை (Enforcement Department inspection) தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்தது.
இதைத் தொடர்ந்து சிலம்பரசன் படத்தின் தயாரிப்பு பணிகள் தடைப்பட்ட நிலையில், இப்படமானது கைவிடப்பட்டதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சந்தானத்திற்கும் (Santhanam), சிலம்பரசனிற்கும் இடையே சில பிரச்னைகள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த STR 49 திரைப்படம் கைவிடப்பட்டது குறித்துப் படக்குழுவோ அல்லது சிலம்பரசனும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




டான் பிக்ச்சர்ஸ் வெளியிட்ட STR 49 படப் பதிவு :
The beginning we waited for ❤️#STR49 has started in style and we are super excited to go on floors with this lovely team
Pooja Video 🔗:- https://t.co/HBpEbLjnoS@SilambarasanTR_ @ImRamkumar_B @iamsanthanam @AakashBaskaran @SaiAbhyankkar @11Lohar @kabilanchelliah @philoedit… pic.twitter.com/NeNRzRBqy2
— DawnPictures (@DawnPicturesOff) May 5, 2025
வெற்றிமாறன் – சிலம்பரசன் :
STR49 படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்த படத்திற்குப் பதிலாக இயக்குநர் வெற்றிமாறனுடன் சிலம்பரசன் புதிய படத்தில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தைப் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படத்தின் ப்ரோமோ ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான ஷூட்டிங் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இந்நிலையில் விரைவில் இப்படத்தைப் பற்றிய உறுதியான தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தக் லைஃப் தோல்வி :
நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப். நடிகர் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசனின் நடிப்பில் வெளியான இப்படத்தை, இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். இந்த படத்தில் முன்னணி நாயகியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் நடிகை அபிராமியும் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்திருந்தார்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளியான இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டான நிலையில், அதற்கு ஏற்ற வரவேற்பு கூட இப்படத்திற்குக் கிடைக்கவில்லை என்றே கூறலாம். இப்படமானது இதுவரை சுமார் ரூ. 50.49 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.