Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Silambarasan : வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன்? ஷூட்டிங் புகைப்படம் லீக்!

Vetrimaaran And Silambarasans Shooting Photos Leaked : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக தக் லைஃப் படம் வெளியாகியிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து வெற்றிமாறனுடன் இணையவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

Silambarasan : வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன்? ஷூட்டிங் புகைப்படம் லீக்!
வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன்Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 16 Jun 2025 18:37 PM

சினிமாவில் தனது சிறுவயது முதல் தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் நடிப்பில் கோலிவுட் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான இப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார். கமல் ஹாசனின் (Kamal Haasan) எழுத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் கேங்ஸ்டர் (Gangster) கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தனது கைவசத்தில் STR 49, STR 50 மற்றும் 51 என அடுத்தடுத்த படங்களைத் தனது கைவசத்தில் வைத்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாகக் கோலிவுட் வட்டாரத்தில் நடிகர் சிலம்பரசன், வெற்றிமாறனுடன் (Vetrimaaran) படத்தில் இணையவுள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், அப்படத்தை பற்றி சிலம்பரசனும் சரி, இயக்குநர் வெற்றிமாறனும் சரி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது இந்த புதிய படத்தின் ஷூட்டிங் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. வெற்றிமாறனின் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ளார் என்பது இதன் மூலம் உறுதியாகத் தெரிகிறது. இந்த புகைப்படமானது தற்போது சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.

இணையத்தில் கசிந்த சிலம்பரசனின் புதிய படம் புகைப்படம் :

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணி :

வெற்றி மாறனின் இயக்கத்தில் இறுதியாக விடுதலை 2 படமானது வெளியானது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்த வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படமானது பிரமாண்டமாக உருவாக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இப்படமானது தயாராகவுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கும் வரும் 2025, ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு முன்னே இயக்குநர் வெற்றிமாறன் , நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த படமானது வடசென்னை தொடர்பான கேங்ஸ்டர் படமாக உருவாக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. தற்போது இப்படத்தை ப்ரோமோ ஷூட்டிங் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் சிலம்பரசன், வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் நெல்சன் இருப்பதுபோல் உள்ளது. மேலும் இப்புகைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் லுங்கியில் பக்கா வடசென்னை கெட்டப்பில் இருக்கிறார். ஒருவேளை இந்த படம் வட சென்னை 2வாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் இப்படத்தைப் பெரிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்? அஸ்வின் மீது புகார்!
பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்? அஸ்வின் மீது புகார்!...
சிலம்பரசனின் 'எஸ்டிஆர் 49' படம் கைவிடப்பட்டதா?
சிலம்பரசனின் 'எஸ்டிஆர் 49' படம் கைவிடப்பட்டதா?...
அஜித் குமார் - ஷாலினியுடன் நடிகர் சதீஷ்!
அஜித் குமார் - ஷாலினியுடன் நடிகர் சதீஷ்!...
கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை - திருமாவளவன்
கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை - திருமாவளவன்...
மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்!
மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்!...
வைபவ் நடித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர்!
வைபவ் நடித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர்!...
தனுஷின் 'குபேரா' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
தனுஷின் 'குபேரா' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?...
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!...
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு..
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு.....
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்...