AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வரவுக்கு ஏத்த பிரச்னை இருக்கு எல்லாருக்கும்… வைரலாகும் தனுஷின் பேச்சு

Actor Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பில் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியக உள்ள படம் குபேரா. இந்தப் படத்தின் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்ற நிலையில் அங்கு நடிகர் தனுஷ் இஎம்ஐ பிரச்னை தனக்கும் இருக்கு என்று பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வரவுக்கு ஏத்த பிரச்னை இருக்கு எல்லாருக்கும்… வைரலாகும் தனுஷின் பேச்சு
நடிகர் தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jun 2025 12:28 PM IST

நடிகர் தனுஷ் (Actor Dhanush) தனது 51-வது படத்திற்காக தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் சேகர் கம்முலா (Director Sekhar Kammula) உடன் கூட்டணி வைத்தார். முன்னதாக பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் என்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லிக் போஸ்டர் வெளியானது. அதில் படத்திற்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டு இருந்த நிலையில் படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைகாரனாக நடிப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து குபேரா படம் குறித்து வெளியான அப்டேட்கள் அனைத்தும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று 15-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.

குபேரா பட விழாவில் நடிகர் தனுஷ் பேசியது என்ன?

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் தனுஷிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு நடிகர் தனுஷ் கொடுத்த பதில் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அதன்படி தனுஷிடம் உங்களுக்கு இந்த கடன், இஎம்ஐ இந்த பிரச்னை எல்லாம் இருக்கா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ் எல்லாருக்கும் அந்த பிரச்னை இருக்கதான் செய்யுது. அதன்படி 150 ரூபாய் சம்பாதிப்பவனுக்கு 200 ரூபாய்க்கு பிரச்னை இயக்கு. அதே மாதிரி 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவனுக்கு 2 கோடி ரூபாய்க்கு பிரச்னை இருக்கு. அந்த மாதி இந்த பிரச்னை இல்லாத ஆட்களே இல்லை என்று தெரிவித்தார்.

இணையத்தில் வைரலாகும் நடிகர் தனுஷின் வீடியோ:

தொடர்ந்து பேசிய நடிகர் தனுஷிடம் நீங்க நடிப்பது மட்டும் இன்றி படங்களையும் இயக்கி வருகிறீர்கள். அப்படி நீங்க தெலுங்கு சினிமாவில் ஒரு படம் இயக்குவீர்கள் என்றால் எந்த நடிகரை நாயகனாக வைத்து இயக்குவீங்க என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் நடிகர் தனுஷ் பவன் கல்யாணின் பெயரைக் கூறினார். இதனைக் கேட்ட ரசிகர்கள் கத்தி ஆர்பரித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us