சினிமாவில் அடுத்த அவதாரம்… தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெறுகிறார் லோகேஷ் கனகராஜ்
Director Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தயாரிப்பாளராக சமீபத்தில் சினிமாவில் அறிமுகம் ஆன நிலையில் அடுத்ததாக புதிய அவதாரத்தை எடுக்க உள்ளார். அதன்படி அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகம் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இயக்குநராக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj). இவருக்கு கோலிவுட் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம். இயக்குநராக அறிமுகம் ஆன குறைவான காலத்திலேயே கமல் ஹாசன், விஜய், ரஜினிகாந்த் (Actor Rajinikanth) என தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களின் படங்களை இயக்கிவிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர் கானை வைத்து அடுத்ததாக படத்தை இயக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இயக்குநராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் கோலிவுட் சினிமாவில் வலம் வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சினிமா துறையில் நடிகராக அறிமுகம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிப்புத் துறையில் காலடி பதிக்க உள்ள லோகேஷ் கனகராஜ்:
இதன் காரணமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்காப்பு கலைகளில் பயிற்சிப் பெற்று வருகிறார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலிப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கும் அதே நேரத்தில் தாய்லாந்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்காப்பு கலைகளில் பயற்சிப் பெற்று வருகிறார்.




மேலும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் தான் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகம் ஆக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக அருண் மாதேஸ்வரன் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் இளையராஜாவின் பயோ பிக் படத்தை நடிகர் தனுஷை வைத்து இயக்க உள்ளதாக முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்தப் படத்தின் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவு, லோகேஷ் உடனான கூட்டணியில் வெளியாகவுள்ள படத்தை இயக்க அருண் மாதேஸ்வரன் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் எக்ஸ் தள பதிவு:
#COOLIE FROM 14 AUGUST 2025💥💥💥@rajinikanth sir @anirudhofficial bro @iamnagarjuna sir @nimmaupendra sir #SathyaRaj sir #SoubinShahir sir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off @sunpictures #CoolieFromAug14 pic.twitter.com/vqyLJFW7Il
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 4, 2025
கூலி படத்தில் பிசியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ்:
பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள நிலையில் படத்தின் ஷூட்டிங் முன்னதாகவே முடிந்துவிட்டது. படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.