AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பழம் பெரும் நடிகையும் கிராமியப் பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

Aan Paavam Kollangudi Karuppayee: பழம் பெரும் நடிகையும் கிராமியப் பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். இவர் பாண்டியராஜ் இயக்கி நடித்த ஆண் பாவம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்,

பழம் பெரும் நடிகையும் கிராமியப் பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி காலமானார்
கொல்லங்குடி கருப்பாயிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Jun 2025 11:28 AM IST

தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகையும், கிராமியப் பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி (Kollangudi Karuppayee) வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். இவருக்கு 99 வயது ஆகும். இயக்குநர் பாண்டியராஜன் (Director Actor Pandiyarajan) இயக்கி நடித்த படம் ஆண் பாவம். 1985-ம் ஆண்டு வெளியான இந்த காதல் நகைச்சுவை படத்தில் நடிகர் வி.கே ராமசாமியின் அம்மாவாகவும் நடிகர்கள் பாண்டியராஜன் மற்றும் பாண்டியனின் பாட்டியாகவும் இந்தப் படத்தில் கொல்லங்குடி கருப்பாயி நடித்து இருப்பார். ஆண் பாவம் பாட்டி என்றாலே அனைவருக்கும் நன்கு தெரியும். ஏன் என்றால் இந்தப் படத்தில் இவரின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த ஆண் பாவம் படத்தில் பெரும்பாளான காட்சிகள் பாண்டியராஜன் உடன் கொல்லங்குடி கருப்பயிக்கு இருக்கும். இவர்களின் காம்போ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் கொல்லங்குடி கருப்பாயி நடித்து இருந்தாலும் ஆண் பாவம் படம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவர் வறுமையில் வாடுவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சினிமாவில் ஏமாற்றப்பட்ட கொல்லங்குடி கருப்பாயி:

கிராமியப் பாடகியாக இருந்த கொல்லங்குடி கருப்பாயி நடிகையாக ஆனது பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஆண் பாவம் படத்தின் மூலமாகதான். இந்தப் படத்தை தொடர்ந்து பலப் படங்களில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி தன்னை பலரும் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றியதாக பேட்டிகளில் தெரிவித்து இருந்தார்.

ஆனால் நடிகர் பாண்டியராஜன் தன்னை பிள்ளை இல்லாத குறை தெரியாமல் பார்த்துக்கொண்டார் என்றும் பல நேரங்களில் தனக்கு உதவி செய்தவர் பாண்டியராஜன் என்றும் கொல்லங்குடி கருப்பாயி முன்னதாக பேட்டிகளில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று கொல்லங்குடி கருப்பாயி உயிரிழந்த நிலையில் அவரது மறைவிற்கு திரையுல பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கயல் தேவராஜின் எக்ஸ் தள பதிவு:

Follow Us