மலையாளத்தில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள் – லிஸ்ட் இதோ!
Feel Good Movies: ஃபீல் படங்கள் என்றாலே அது மலையாள சினிமாதான் என்று சொல்லும் அளவிற்கு தென்னிந்திய சினிமாவில் அதிகப்படியான ஃபீல் குட் படங்களை கொட்டிக் கொடுத்துள்ளது மலையாள சினிமா. அந்த வகையில் மலையாள சினிமாவில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய சில ஃபீல் குட் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

அம்பிலி: இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அம்பிலி. காமெடி ட்ராமாவை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் நடிகர் ஷௌபின் ஷாகீர் (Actor Soubin Shahir) நாயகனாக நடித்து இருந்தார். இவர் ஆட்டிசம் குறைபாடு உள்ள நபராக ஒரு தூய மனதுடையவராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவருடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் நவீன் நசீம், தன்வி ராம், ஜாஃபர் இடுக்கி, ஸ்ரீலதா நம்பூதிரி, ரபியா பேகம், பினு பப்பு, வெட்டுக்கிளி பிரகாஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் முகேஷ் ஆர். மேத்தா, ஏ. வி. அனூப், சி. வி. சாரதி ஆகியோர் E4 என்டர்டெயின்மென்ட் மற்றும் AVA புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் தயாரித்து இருந்தனர். இந்தப் படம் மலையாளத்தில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஷௌபின் ஷாகீர் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram




பேங்களூர் டேய்ஸ்: இயக்குநர் அஞ்சலி மேனன் எழுதி இயக்கி கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பேங்களூர் டேய்ஸ். இந்தப் படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நசீம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஃபகத் பாசில், பார்வதி, நித்யா மேனன், மணியன்பிள்ளை ராஜூ, விஜய ராகவன், கல்பனா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஓம் சாந்தி ஓஷான: இயக்குநர் ஜூடு ஆண்டனி ஜோசஃப் எழுதி இயக்கிய படம் ஓம் சாந்தி ஓஷான. கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ரொமாண்டிக் காமெடிப் படமாக உருவான இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாகவும் நடிகை நஸ்ரியா நசீம் நாயகியாகவும் நடித்து இருந்தார்.
இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் வினீத் ஸ்ரீனிவாசன், ரெஞ்சி பணிக்கர் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் அல்வின் ஆண்டனி தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.