Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு வீடியோ வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா

Sudha Kongara: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர் என்று ஒரு கலக்கு கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர், அந்த வரிசையில் இயக்குநர் சுதா கொங்கரா வெளியிட்ட பிறந்த நாள் பதிவு வைரலாகி வருகின்றது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு வீடியோ வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா
ஜி.வி.பிரகாஷ், சுதா கொங்கராImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Jun 2025 21:06 PM

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவர் இன்று ஜூன் மாதம் 13-ம் தேதி 2025-ம் ஆண்டு தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அந்தப் பதிவில் இயக்குநர் சுதா கொங்கரா கூறியுள்ளதாவது, ”எங்களுடைய முதல் கூட்டணியில் உருவான படத்தின் இசையமைப்பு நிகழ்வு இது. இந்தப் பணி அடுத்து… அடுத்து… அடுத்து… என்று தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி.வி.பிரகாஷ் குமார்” என்று இயக்குநர் சுதா கொங்கரா தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா வெளியிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

சுதா கொங்கரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

பராசத்தி படத்திற்கு இசையமைக்கு ஜி.வி.பிரகாஷ் குமார்:

ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வந்தாலும் இசையமைக்கும் பணியை அவர் தொடர்ந்து செய்துகொண்டே வருகிறார். அந்த வகையில் அவர் முதன்முறையாக இயக்குநர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்தப் படம் சூரரைப் போற்று. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததுப் போல படத்தில் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இவர்களது கூட்டணி பராசக்தி படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் அதர்வா, ரவி மோகன் ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூரரைப் போற்று படத்தைப் போல இந்தப் படத்திலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சேலைக்கு ஃபால் தைப்பது ஏன் அவசியம்? - அறியாத நன்மைகள்!
சேலைக்கு ஃபால் தைப்பது ஏன் அவசியம்? - அறியாத நன்மைகள்!...
டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி - ஆர்.பி உதயகுமார்..
டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி - ஆர்.பி உதயகுமார்.....
சென்னையில் ஒரு திருவண்ணாமலை.. இந்த அண்ணாமலையார் கோயில் தெரியுமா?
சென்னையில் ஒரு திருவண்ணாமலை.. இந்த அண்ணாமலையார் கோயில் தெரியுமா?...
ஜூன் 16 முதல் பைக் டாக்ஸிக்கு தடை... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஜூன் 16 முதல் பைக் டாக்ஸிக்கு தடை... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!...
இஸ்ரேல் தாக்குதலை கண்டிக்க வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம்..
இஸ்ரேல் தாக்குதலை கண்டிக்க வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம்.....
நடிகையும் கிராமியப் பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி காலமானார்
நடிகையும் கிராமியப் பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி காலமானார்...
நோட் பண்ணுங்க.. ஆனி மாதத்தின் முக்கிய விசேஷ தினங்கள் இதோ!
நோட் பண்ணுங்க.. ஆனி மாதத்தின் முக்கிய விசேஷ தினங்கள் இதோ!...
கரையோர மக்களே உஷார்: அமராவதி அணை திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை!
கரையோர மக்களே உஷார்: அமராவதி அணை திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை!...
Fixed Deposit விதிகளில் வந்த முக்கிய மாற்றம் - ஆர்பிஐ அதிரடி!
Fixed Deposit விதிகளில் வந்த முக்கிய மாற்றம் - ஆர்பிஐ அதிரடி!...
லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் சதம்.. வரலாற்று சாதனை படைத்த மார்க்ரம்!
லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் சதம்.. வரலாற்று சாதனை படைத்த மார்க்ரம்!...
சென்னை மக்களே கவனிங்க.. 3 நாட்களுக்கு மின்சார ரயில்கள் ரத்து
சென்னை மக்களே கவனிங்க.. 3 நாட்களுக்கு மின்சார ரயில்கள் ரத்து...