Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரஜினிகாந்தின் கூலி படத்தில் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

Rajinikanth Coolie Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படம் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளியாகி ரசிகரக்ளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் கூலி படத்தில் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்
கூலிImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jun 2025 11:37 AM

நடிகர் ரஜினிகாந்த (Actor Rajinikanth) நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டு அதிகம் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) உடன் கூட்டணி வைக்கிறார் என்பதே ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் அறிவிப்பும், நடிகர்களின் அறிவிப்பும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி படத்தின் முதல் சிங்கிள் வீடியோ இந்த வாரம் வெளியாகும் என்று அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத் நடனம் ஆட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படமும் வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இணையத்தில் வைரலாகும் ட்விட்டர் பதிவு:

மேலும் இந்தப் படத்தில் பான் இந்திய அளவில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, அமீர் கான், சௌபின் ஷாகிர், உபேந்திரா ராவ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்த உடனே நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகளில் கலந்துகொண்டார். இந்தப் படம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?...
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!...
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு..
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு.....
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்...
இந்த 5 காரணங்களால் ஃபிரிட்ஜ் வெடிக்கலாம் - தவிர்ப்பது எப்படி?
இந்த 5 காரணங்களால் ஃபிரிட்ஜ் வெடிக்கலாம் - தவிர்ப்பது எப்படி?...
ரொமான்ஸ் செய்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜோடி - வைரல்!
ரொமான்ஸ் செய்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜோடி - வைரல்!...
16 வயது சிறுவன் கடத்தல் விவகாரம்.. ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது..!
16 வயது சிறுவன் கடத்தல் விவகாரம்.. ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது..!...
ராசி மாறும் செவ்வாய் மற்றும் சனி... 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை
ராசி மாறும் செவ்வாய் மற்றும் சனி... 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை...
பெண் பயணியை கன்னத்தில் அறைந்த Rapido ஓட்டுநர் - வைரல்!
பெண் பயணியை கன்னத்தில் அறைந்த Rapido ஓட்டுநர் - வைரல்!...
நடிகை சோனியா அகர்வால் குறித்து ரவி கிருஷ்ணா ஓபன் டாக்
நடிகை சோனியா அகர்வால் குறித்து ரவி கிருஷ்ணா ஓபன் டாக்...
உடலில் கப தோஷம் ஏன் அதிகரிக்கிறது? குறைக்க பதஞ்சலி தரும் டிப்ஸ்!
உடலில் கப தோஷம் ஏன் அதிகரிக்கிறது? குறைக்க பதஞ்சலி தரும் டிப்ஸ்!...