Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rashmika Mandanna : விஜய் தேவரகொண்டா குறித்த கேள்வி.. ராஷ்மிகா மந்தனா கொடுத்த கியூட் ரியாக்ஷ்ன்!

Rashmika Mandanna Viral Video : பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் குபேரா. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பற்றிய கேள்விக்கு அவர் கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rashmika Mandanna : விஜய் தேவரகொண்டா குறித்த கேள்வி.. ராஷ்மிகா மந்தனா கொடுத்த கியூட் ரியாக்ஷ்ன்!
ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 16 Jun 2025 16:34 PM

நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் விரைவில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் குபேரா (Kuberaa). இந்த படத்தில் நடிகர்கள் தனுஷ் (Dhanush) மற்றும் நாகார்ஜுனா (Nagarjuna)  முன்னணி கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. குபேரா திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகர் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தைத் தெலுங்கு பிரபல இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் அரசியல் கதைக்களம் சார்ந்து இப்படமானது உருவாகியிருக்கிறது. இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு சமீபத்தில், ஹைதராபாத்தில் (Hyderabad)  ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி  (Pre-release event) நடைபெற்றது. அதில் குபேரா படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியின் போது ராஷ்மிகாவிடம் விஜய் தேவரகொண்டாவை பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கொடுத்த பதில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா என்ன கூறினார் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்

இணையத்தில் வைரலாகும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ

அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ராஷ்மிகா மாந்தனாவிடம், ஒரு நடிகரிடம் இருந்து முக்கியமான விஷயங்களை எடுத்துக் கொள்வீர்கள் என்றால் எதை எடுப்பீர்கள் என, நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பெயரைக் கூறினார். அதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவும் வெட்கப்பட்டுக்கொண்டே, “விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து அனைத்து விஷயங்களையும் எடுத்துக்கொள்வேன்” என்று கூறினார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மீண்டும் இவர்கள் இருவரின் காதல் குறித்த பேச்சுக்கள் இணையத்தில் அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குபேரா திரைப்படம் :

இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் பான் இந்திய மொழி திரைப்படமாக உருவாகியிருப்பது குபேரா. நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் ஷார்ப் மற்றும் சுனைனா எனப் பல பிரபலங்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். சுமார் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது.

தெலுங்கு மொழியில் உருவாகியிருக்கும் இப்படமானது தமிழ் , மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் டிக்கெட் புக்கிங் விரைவில் தமிழகத்தில் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்? அஸ்வின் மீது புகார்!
பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்? அஸ்வின் மீது புகார்!...
சிலம்பரசனின் 'எஸ்டிஆர் 49' படம் கைவிடப்பட்டதா?
சிலம்பரசனின் 'எஸ்டிஆர் 49' படம் கைவிடப்பட்டதா?...
அஜித் குமார் - ஷாலினியுடன் நடிகர் சதீஷ்!
அஜித் குமார் - ஷாலினியுடன் நடிகர் சதீஷ்!...
கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை - திருமாவளவன்
கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை - திருமாவளவன்...
மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்!
மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்!...
வைபவ் நடித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர்!
வைபவ் நடித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர்!...
தனுஷின் 'குபேரா' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
தனுஷின் 'குபேரா' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?...
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!...
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு..
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு.....
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்...