Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kuberaa : அதிரடி நாயகனான தனுஷ்.. எதிர்பார்ப்பைத் தூண்டும் குபேரா ட்ரெய்லர் வெளியானது!

Dhanushs Kuberaa Movie Trailer : தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக நடித்துவரும், தனுஷின் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகியிருக்கும் படம்தான் குபேரா. அதிக எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Kuberaa : அதிரடி நாயகனான தனுஷ்.. எதிர்பார்ப்பைத் தூண்டும் குபேரா ட்ரெய்லர் வெளியானது!
தனுஷ் - ராஷ்மிகா - நாகர்ஜூனா
barath-murugan
Barath Murugan | Published: 15 Jun 2025 22:53 PM

டோலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர்தான் சேகர் கம்முலா (Sekhar Kammula). இவரின் இயக்கத்தில் பான் இந்தியப் படமாக உருவாகியிருப்பது குபேரா (Kuberaa). இந்த படத்தில் முன்னணி நாயகனாகத்  நடிகர் தனுஷ் (Dhanush) நடித்துள்ளார். இந்த படமானது தனுஷின் 52வது திரைப்படமாக கடந்த 2023ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் முன்னணி நாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜுனா (Nagarjuna) இணைந்து நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பான் இந்திய நாயகி ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்துள்ளார். இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த குபேரா படமானது, அரசியல் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தில்  ஊழல்கள் குறித்து முக்கியமாகப் பேசப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad) இசையமைத்திருக்கிறார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற வருகிறது. மேலும் இப்படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.

குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

 

தனுஷின் குபேரா ட்ரெய்லர் எப்படி இருக்கிறது :

இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் இந்த படமானது மிகவும் வித்தியாசமாகவே அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் தேவா என்றார் பிச்சைக்காரனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா மிக முக்கிய அரசியல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் சாதாரணமான பெண் கதாபாத்திரத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் தனுஷின் நடிப்பே இந்த ட்ரெய்லரில் மிகவும் அருமையாக இருக்கிறது. நிச்சயமாக பான் இந்திய வெற்றிப் படமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரெய்லர் மற்றும் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி :

இந்த குபேரா படத்தின் ட்ரெய்லர் மற்றும் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த 2025, ஜூன் 13ம் தேதியில் ஹைதராபாத்தில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் ஏர் இந்தியா விமான விபத்தின் காரணமாக, அன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சி மற்றும் ட்ரெய்லர் ரிலீஸை படக்குழு மொத்தமாக 2025, ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு படத்தின் ட்ரெய்லரும் வெளியாகியுள்ளது.

இந்த குபேரா படமானது அரசியல் சார்ந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. மேலும் வரும் 2025, ஜூன் 20ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகருக்கு அம்மாவாக நடிக்க மறுத்த நடிகை தேவயானி!
பிரபல நடிகருக்கு அம்மாவாக நடிக்க மறுத்த நடிகை தேவயானி!...
ஜூன் 18 வரை நீலகிரி பக்கம் போக வேண்டாம் - பிரதீப் ஜான்..
ஜூன் 18 வரை நீலகிரி பக்கம் போக வேண்டாம் - பிரதீப் ஜான்.....
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது ஏற்படும் அறிகுறிகள்?
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது ஏற்படும் அறிகுறிகள்?...
ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி - FD வட்டியை குறைத்த எஸ்பிஐ!
ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி - FD வட்டியை குறைத்த எஸ்பிஐ!...
ஏசியில் அதிக நேரம் இருந்தால் எலும்புகள் பாதிக்குமா?
ஏசியில் அதிக நேரம் இருந்தால் எலும்புகள் பாதிக்குமா?...
தனுஷ் - நாகார்ஜுனாவின் குபேரா பட ட்ரெய்லர் வெளியானது!
தனுஷ் - நாகார்ஜுனாவின் குபேரா பட ட்ரெய்லர் வெளியானது!...
வயிறு ஆரோக்கியமாக இருந்தால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்!
வயிறு ஆரோக்கியமாக இருந்தால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்!...
ரோஹித் அசிங்கமாக திட்டினாலும்.. ஓபனாக பேசிய சுப்மன் கில்!
ரோஹித் அசிங்கமாக திட்டினாலும்.. ஓபனாக பேசிய சுப்மன் கில்!...
காந்தாரா படப்பிடிப்பில் படகு கவிழந்து விபத்து !
காந்தாரா படப்பிடிப்பில் படகு கவிழந்து விபத்து !...
EX- முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு நாளை குஜராத் அரசு மரியாதை!
EX- முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு நாளை குஜராத் அரசு மரியாதை!...
ரூ.7,999 & ரூ.9,999-க்கு அறிமுகமான லாவாவின் புதிய ஸ்மார்ட்போன்கள்
ரூ.7,999 & ரூ.9,999-க்கு அறிமுகமான லாவாவின் புதிய ஸ்மார்ட்போன்கள்...