Kannappa : கண்ணப்பா படத்தின் ட்ரெய்லரில் இதைக் கவனித்தீர்களா?
Kannappa Movie Tamil Trailer : பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியிருக்கும் படம்தான் கண்ணப்பா. இந்த படத்தைத் தயாரிப்பாளரும் நடிகருமான விஷ்ணு மஞ்சு பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். புராணக் கதையான கண்ணப்பனின் இப்படம் வரும் 2025, ஜூன் 27ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படக்குழு இப்படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஷ்ணு மஞ்சு (Vishnu Manchu). இவரின் முன்னணி நடிப்பிலும் தயாரிப்பிலும் மிகப் பிரம்மாண்டமாக, பான் இந்தியப் படமாக உருவாகியிருப்பதுதான் கண்ணப்பா (Kannappa). இந்தப் படத்தின் கதையைத் தயாரிப்பாளரும், நடிகருமான விஷ்ணு மஞ்சு எழுத, இயக்குநர் முகேஷ் குமார் சிங் (Mukesh Kumar Singh) இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது இந்துக்களின் புராணக் கதையான “கண்ணப்பன்” (Kannappan) கதையைப் பயன்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் இந்த கண்ணப்பா. இந்த படத்தில் பான் இந்திய நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவனாக அக்ஷய்குமார் (Akshay Kumar), பார்வதியாக காஜல் அகர்வால் (Kajal Aggarwal), ருத்ராவாக நடிகர் பிரபாஸ் (Prabhas) , கிரதவாக நடிகர் மோகன் லால் (Mohanlal) என பல்வேறு மொழி நடிகர்கள் இணைந்து இந்த கண்ணப்பா திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இது ஒரு இந்து சமயம் சார்ந்த புராணக் கதையாகும். இந்த படமானது சுமார் ரூ. 150 முதல் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படமானது வரும் 2025, ஜூன் 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படக்குழு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.




கண்ணப்பா படக்குழு வெளியிட்ட பதிவு :
🕉️ TRAILER OUT NOW! 🕉️
An unforgettable tale of love, faith & sacrifice. #Kannappa🏹 — the story of a humble hunter whose devotion shook the heavens — now comes to life in this powerful trailer.
A grand Historical masterpiece awaits!
Har Har Mahadev 🔱
Har Ghar Mahadev 🔥… pic.twitter.com/RZCA5dWpCF— Kannappa The Movie (@kannappamovie) June 14, 2025
கண்ணப்பா படத்தில் பான் இந்திய நடிகர்கள் :
இந்த படமானது இந்து புராண கதைக்களம் கொண்டு உருவாகியிருக்கிறது. தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில், தெலுங்கு நடிகர் பிரபாஸும் மிக முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் கண்ணப்பனாகத் தயாரிப்பாளரும், நடிகருமான விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார். சிவனின் தீவிர பக்தனான கண்ணப்பனின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படமானது உருவாகியிருக்கிறது. இப்படத்தில்தான் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் கண்ணப்பனின் மனைவி நிலீமை கதாபாத்திரத்தில் தமிழ் பிரபல நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இவர் கவினின் ஸ்டார் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்த கண்ணப்பா படமானது பல கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது.
இப்படமானது வரும் 2026, ஜூன் 27ம் தேதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரீ – புக்கிங் விரைவில் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. இந்த கண்ணப்பா படம் நிச்சயமாக பான் இந்திய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.