Thug Life : திரிஷாவின் சிறப்பான நடனம்.. தக் லைஃப் படத்திலிருந்து ‘முத்தமழை’ வீடியோ பாடல் !
Thug Life Movie Muththa Mazhai Song : நடிகர் கமல் ஹாசனின் முன்னணி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். அதிரடி ஆக்ஷ்ன் படமாக வெளியான இப்படத்திலிருந்து, அனைவரும் எதிர்பார்த்த திரிஷாவின் முத்தமழை பாடல் வெளியாகியுள்ளது.

கோலிவுட் சினிமாவில் கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தைத் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கதையை நடிகர் கமல் ஹாசனும்(Kamal Haasan), மணிரத்னமும் இணைந்து எழுதியிருந்தனர். இந்த தக் லைஃப் படமானது கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. இந்த படமானது நடிகர் கமல் ஹாசனின் 234வது திரைப்படமாக கடந்த 2022ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் கமல் ஹாசன் முன்னணி நாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு இணையான ரோலில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan) இணைந்து நடித்திருந்தார். இவர்கள் இருவரின் நடிப்பு இப்படத்தில் நன்றாக இருந்தது என்றே கூறலாம். கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியான இப்படமானது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணனும் (Trisha Krishnan) இதுவரை நடித்திடாத மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு போதுமான அளவிற்கு வரவேற்புகள் இல்லாவிட்டாலும், இப்படத்திலிருந்து வெளியான முத்தமழை என்ற பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. இந்நிலையில் நடிகை திரிஷாவின் நடனத்தில் இந்த தக் லைஃப் படத்திலிருந்து “முத்தமழை” (Muththa Mazhai) என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பாடலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.




தக் லைஃப் படக்குழு வெளியிட்ட முத்தமழை வீடியோ பாடல் :
The Melody We Felt in Our Hearts is Now On Screen! 😍#MuththaMazhai #MudduVaana Video Song From #ThugLife Drops Today at 6 PM! 🎶♥
Watch Exclusively here – https://t.co/Riv1cOykY0
A #ManiRatnam Film
An @arrahman Musical🎙 @Chinmayi @talktodhee
✍🏻 @bagapath @IananthaSriram… pic.twitter.com/7QhF8q8vGQ— Saregama South (@saregamasouth) June 14, 2025
தக் லைஃப் படத்தில் இடம்பெறாத முத்தமழை பாடல்
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, பாடகி சின்மயின் குரலில் பாடப்பட்ட இந்த முத்தமழை பாடலானது இணையத்தில் வைரலாகி வந்தது. உண்மையிலே தக் லைஃப் படத்தின் தமிழ் வெர்சனில் பாடகி தீதான், இந்த பாடலை பாடியிருந்தார். ஆனால் இசை வெளியீட்டு விழாவிற்கு அவர் வரமுடியாத காரணத்தால் , பாடகி சின்மயி இப்பாடலைத் தமிழில் பாடியிருந்தார். அதைத் தொடர்ந்து இப்பாடலும் இணையத்தில் விரலாகிவந்தது.
மேலும் இப்படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டியது என்றே கூறலாம். ஆனால் இந்த தக் லைஃப் படத்தில் இந்த முத்தமழை பாடல் இடம்பெறவில்லை. இந்த விஷயமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்து என்றே கூறலாம். இந்நிலையில், படமானது ரிலீசாகி 2 வாரங்களான நிலையில், இதுவரை சுமார் ரூ. 50 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திரையரங்குகளில் இப்படத்தின் வரவேற்புகளும் படிப்படியாகக் குறித்து வருகிறது. இந்நிலையில் முத்தமழை என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகை திரிஷா கிருஷ்ணனின் நடனத்தில் இப்பாடலானது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.