Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

OTT Update : ரிலீசாகிய சில நாட்களில் ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’!

Ace Movie Released On OTT : கோலிவுட் சினிமாவில் கடந்த 2025, மே மாதத்தின் 23ம் தேதியில் வெளியான திரைப்படம் ஏஸ். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முன்னணி நாயகனாக நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு போதுமான ப்ரோமோஷன் இல்லாத நிலையில், படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த படமானது தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

OTT Update : ரிலீசாகிய சில நாட்களில் ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’!
விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 13 Jun 2025 21:54 PM

இயக்குநர் ஆறுமுக குமாரின் (Arumuga Kumar) இயக்கத்தில் இறுதியாக வெளியான பிரம்மாண்ட கதைக்களம் கொண்ட படம்தான் ஏஸ் (Ace). இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025, மே 23ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் ஆறுமுக குமாரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தை 7சிஎஸ் என்டேர்டைமென்ட் (7CS Entertainment) நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ருக்மினி வசந்த் (Rukmini Vasanth) நடித்திருந்தார். அவர் இப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் (Yogi Babu) மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகக் கூறப்படும் இப்படமானது. மொத்தமாக சுமார் ரூ. 26. 25 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்த படமானது திரையரங்குகளில் வெளியையும் பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படமானது வெளியாகி வெறும் 3 வாரங்களே ஆகியுள்ள நிலையில், அமேசான் பிரேம் ஓடிடியில் இன்று 2025, ஜூன் 13ம் தேதியில் வெளியாகியுள்ளது. ஓடிடியில் வெளியான இப்படமானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் :

ஏஸ் திரைப்படத்தின் கதைக்களம் :

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான இந்த ஏஸ் படமானது, கடத்தல் சார்ந்த கதைக்களத்துடன் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபுவின் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது என்றே கூறலாம். மேலும் இப்படத்தில் யோகி பாபுவின் டைமிங் நகைச்சுவை மற்றும் அவரின் கதாபாத்திரமும் மிக முக்கியமாக அமைந்துள்ளது.

மேலும் இப்படத்தில் நடிகர்களுக்கு இணையாகத் தனது நடிப்பையும் நடிகை ருக்மினி வசந்த் கொடுத்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி மற்றும் ருக்மிணி வசந்தின் ஜோடியும் இப்படத்தில் ஓரளவு ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. மேலும் இப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜஸ்ட்டின் பிரபாகரன் அருமையாக பணியாற்றியுள்ளார்.

விஜய் சேதுபதியின் புதிய படங்கள் :

ஏஸ் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் தமிழில் அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி படமானது போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணியிலிருந்து வருகிறது . இந்த படத்தின் கதையும் காதலை மையமாக கொண்டு உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் முதல் பாடலான “பொட்டல முட்டையே” என்ற பாடலும் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து மிஷ்கினின் இயக்கத்தில் ட்ரெயின் திரைப்படமும் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணியில் இருக்கிறது. மேலும் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய நானி
டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய நானி...
சனிக்கிழமைகளில் இந்த பொருட்கள் வாங்காதீங்க.. நிதி பிரச்னை வரும்!
சனிக்கிழமைகளில் இந்த பொருட்கள் வாங்காதீங்க.. நிதி பிரச்னை வரும்!...
விண்வெளி செல்லும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா.. எப்போது?
விண்வெளி செல்லும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா.. எப்போது?...
அனிமேஷன் ஸ்டிக்கர் முதல் போட்டோ Poll வரை - வாட்ஸ்அப் அப்டேட்ஸ்!
அனிமேஷன் ஸ்டிக்கர் முதல் போட்டோ Poll வரை - வாட்ஸ்அப் அப்டேட்ஸ்!...
நீலகிரியில் 300 மி.மீ மழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்
நீலகிரியில் 300 மி.மீ மழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்...
வீட்டின் உள்ளே சுரங்கப்பாதை அமைத்து டீசலை திருடிய கும்பல்..
வீட்டின் உள்ளே சுரங்கப்பாதை அமைத்து டீசலை திருடிய கும்பல்.....
நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியானது
நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியானது...
யோகாசனம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான 13 முக்கிய நன்மைகள்!
யோகாசனம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான 13 முக்கிய நன்மைகள்!...
எது ஒரு கேக் ரூ.5 லட்சமா? - இணையத்தில் தீயாய் பரவும் ஸ்கிரீன்ஷாட்
எது ஒரு கேக் ரூ.5 லட்சமா? - இணையத்தில் தீயாய் பரவும் ஸ்கிரீன்ஷாட்...
ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் படம் எப்படி இருக்கு?
ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் படம் எப்படி இருக்கு?...
சேலைக்கு ஃபால் தைப்பது ஏன் அவசியம்? - அறியாத நன்மைகள்!
சேலைக்கு ஃபால் தைப்பது ஏன் அவசியம்? - அறியாத நன்மைகள்!...