Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Nagarjuna: ‘கூலி’ படம் இப்படித்தான் இருக்கும்.. நாகார்ஜூனா கொடுத்த அப்டேட்!

Nagarjuna Role In Coolie Movie : டோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நாகார்ஜுனா. இவரின் நடிப்பில் ரிலீசிற்கு குபேரா மற்றும் கூலி என பான் இந்தியப் படங்கள் காத்திருக்கிறது. இதில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நாகார்ஜுனா, கூலி படத்தில் தனது கதாபாத்திரம் பற்றிப் பேசியுள்ளார்.

Nagarjuna: ‘கூலி’ படம் இப்படித்தான் இருக்கும்.. நாகார்ஜூனா கொடுத்த அப்டேட்!
நாகார்ஜுனா மற்றும் லோகேஷ் கனகராஜ் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Jun 2025 12:04 PM

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நாகார்ஜுனா (Nagarjuna). இவரின் நடிப்பில் மற்றும் நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் குபேரா (Kuberaa). இப்படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படமானது பான் இந்தி படமாக வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் நாகார்ஜுனா நடித்துள்ள தமிழ் திரைப்படம்தான் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  (Lokesh Kanagaraj)இயக்கியுள்ளார்.

இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் மாஃபியா தொடர்பான கதைக்களத்துடன் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தில் ரஜினியுடன் நடிகர்கள் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திர ராவ் மற்றும் அமீர்கான் உட்பட பான் இந்திய நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், குபேரா படத்தின் ரிலீஸ் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் நாகார்ஜுனா, கூலி படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி ஓபனாக பேசியுள்ளார். அதில் குபேரா படத்தை ஒப்பிடும்போது கூலி திரைப்படமானது மொத்தமாக வேறு படம் என்று கூறியுள்ளார். இது பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

கூலி படம் குறித்து நாகார்ஜுனா பேச்சு :

கூலி திரைப்படம் குறித்துப் பேசிய நடிகர் நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜ் கூலி படத்தில் நடிப்பது குறித்துப் பேசியதும் ஒத்துக்கொண்டேன். இந்த கூலி படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் மிக மிக முக்கியமான கதாபாத்திரம். குபேரா படத்தில் எனது கதாபாத்திரத்தைப் பார்த்துவிட்டு, கூலி படத்தில் பார்த்தீர்கள் என்றால் மொத்தமாக வேறு வேறாக இருக்கும்.

இந்த இரு படங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லைதான், ஆனால் கூலி படத்தில் எனது நடிப்பு முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை மொத்தமாக வேறு ஆளாகக் காட்டியிருக்கிறார், அவருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும் லோகேஷ் கனகராஜின் படத்தின் நோக்கம் மற்றும் அவர் கொண்டு செல்லும் பாதை நிச்சயமாகப் பயங்கரமாகத்தான் இருக்கும். நிச்சயமாகக் கூலி திரைப்படம் ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக விசில் போடக்கூடிய திரைப்படமாகத்தான் இருக்கும்” என்று நடிகர் நாகார்ஜுனா கூறியுள்ளார்.

கூலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த கூலி படத்தை , சன் பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படமானது சுமார் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியிருக்கும் நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ளது.

அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படமானது பான் இந்திய வெற்றிப் படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தின் ரிலீசிற்கு இன்னும் 1 மாதம் மட்டும் இருக்கும் நிலையில், விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.