Siddharth : ’3BHK படத்தில் நடிக்க ஓகே சொன்ன காரணம்’.. நடிகர் சித்தார்த்
3BHK Movie : தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சித்தார்த். இவரின் நடிப்பில் டெஸ்ட் படத்திற்குப் பின் உருவாகியுள்ள படம்தான் 3BHK . வீடு சார்ந்த கதைக்களத்துடன் கூடிய இப்படத்தில் நடித்ததற்கான காரணம் பற்றி நடிகர் சித்தார்த் ஓபனாக கூறியிருக்கிறார்.

நடிகர் சித்தார்த் (Siddharth) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டெஸ்ட் (Test). இந்த படத்தைத் தயாரிப்பாளர் எஸ். சசிகாந்த் இயக்கியிருந்தார். கிரிக்கெட் சார்ந்த கதைக்களத்துடன் கூடிய இப்படமானது திரையரங்குகளில் வெளியாகாமல், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த 2025, ஏப்ரல் மாதம் 4ம் தேதியில் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சித்தார்த் நடித்துவந்த படம்தான் 3BHK . இந்த படத்தினை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (Shri Ganesh) இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சித்தார்த்துடன் நடிகர்கள் சரத்குமார் (Sarathkumar), தேவியானி (Deviyani) மற்றும் குட் நைட் பட புகழ் நடிகை மீத்தா ரகுநாத் (Meetha Raghunath) உட்படப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். பல வருடங்களுக்குப் பின் நடிகர்கள் சரத்குமார் மற்றும் தேவியானியின் நடிப்பில் குடும்ப கதைக்களம் கொண்ட திரைப்படமாக இந்த 3BHK படமானது அமைந்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, ஆண்டு பிப்ரவரி மாதத்திலே நிறைவடைந்தது .
அதைத் தொடர்ந்து இப்படமானது இறுதிக்கட்ட வேலைகளில் இருந்து வந்தது. மேலும் இப்படமானது வரும் 2025, ஜூலை 4ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என் படக்குழு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சித்தார்த் இப்படத்தின் கதையைத் தேர்ந்தெடுத்தது குறித்தும், கதையின் ரசனையைப் பற்றியும் பேசியிருக்கிறார். அது குறித்தது விளக்கமாகப் பார்க்கலாம்.




3BHK படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Can’t wait to welcome you home on JULY 4TH🏡
10 days to go for #3bhk#3bhkfromjuly4 #3bhktelugu#Siddharth @realsarathkumar @sri_sriganesh89 #Devayani @RaghunathMeetha @Chaithra_Achar_ @iYogiBabu @iamarunviswa @dineshkrishnanb #JithinStanislaus @amritramnath23@thecutsmaker… pic.twitter.com/P79TACSOBK
— Shanthi Talkies (@ShanthiTalkies) June 24, 2025
நடிகர் சித்தார்த் 3BHK படத்தை பற்றி பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில் பேசிய நடிகர் சித்தார்த், “இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இப்படத்தின் கதையை கூறுவதற்கு முன்னே என்னிடம் ஒன்று கூறினார். சார் என்னிடம் 2 படத்தின் கதை இருக்கிறது, அதை கேளுங்கள் அதுவும் பிடிக்கவில்லை என்றால் வேறு கதையானாலும் பண்ணலாம் என்று கூறினார். நானும் உடனே அவரிடம் நானும் கதையை முதலில் கூறுங்கள் என்றேன். அப்போது அவர் கூறிய முதல் கதைதான் இந்த 3BHK படத்தின் கதை. எனக்கு இப்படத்தின் கதையைக் கேட்டதும் மிகவும் பிடித்திருந்தது, நிறைய ரசித்து கதையை கேட்டேன் மற்றும் அந்த கதையும் வாங்கி படித்தேன். மேலும் அப்படியே இந்தப் படத்தின் திட்டம் ஓகே ஆனது.
ஓகே சொன்ன காரணம்
மேலும் இப்படத்தில் அறிமுக வீடியோவில் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்ட வீடியோ இருக்கும், அந்த வீடியோவில் அவர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எவ்வாறு வர்ணித்திருந்தார் அதுதான் இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுதான் நான் உடனே ஓகே சொல்ல காரணம். வீடு கட்டுவது என்பது அனைவரின் கனவு ஆகும், அது எவ்வாறு அமையும் எப்படி கஷ்டம் கொடுக்கும் என்பதுதான் விஷயம்.
நானும் சிறுவயதிலிருந்து வீடு பற்றிய பல விஷயங்களைக் கடந்து வந்திருக்கிறேன், மேலும் நானும் ஒரு பெரிய நிலைமைக்கு வந்ததும், என்னிடம் பலரும் கேட்ட கேள்வி சொந்த வீட்டில் இருக்கிறீர்களாக அல்லது வாடகை வீடா என்பதுதான். அது போலத்தான் இப்படமும் அமைந்திருக்கிறது என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.