Ajith : அஜித் குமாரின் 64-வது படத்தின் நாயகி இவரா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
Ajith Kumar 64th Movie Update : கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜித் குமார். அவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தினை தொடர்ந்து, அஜித்64 என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அவருடன் ஜோடியாகப் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராகவும், கார் ரேஸராகவும் வலம் வருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவருக்குக் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதியில் பத்மபூஷன் (Padma Bhushan) விருதை இந்திய அரசு கொடுத்து கௌரவித்தது. மேலும் விருதைப் பெற்ற கையோடு மீண்டும் கார் ரேஸில் (Car Race) கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் ஆக்ஷ்ன் அதிரடி நாயகனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் மேலும் முக்கிய வில்லனாக நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படமானது வெளியாகி சுமார் ரூ. 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் மீண்டும் , இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. அஜித் 64வது படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் அல்லது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் எந்த நடிகை நடிக்கவுள்ளார் என்பது உட்பட இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த நடிகை வேறு யாருமில்லை, ஹிட் 3, கேஜிஎப் மற்றும் தமிழில் கோப்ரா போன்ற படங்களில் நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிதான் (Srinidhi Shetty). இவர்தான் அஜித்தின் 64வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
அஜித்தின் 64வது திரைப்படம் :
நடிகர் அஜித்தின் இறுதியாக வெளியான படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கியிருந்தார். இந்தப் படமானது மாபெரும் வரவேற்பைப் பெற்று நல்ல வசூலைப் பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்துடன் மீண்டும் படத்தில் இணையவிருப்பதாகவும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருந்தார்.
மேலும் நடிகர் அஜித் குமாரும், பத்திரிகையாளர்கள் பேட்டி ஒன்றில், “தனது லக்கி இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துடன் தனது 64வது திரைப்படத்தில் இணைவேன் என்றும், இப்படத்தின் ஷூட்டிங் வரு 2025, நவம்பர் மாதத்தில் தொடங்கும்” என்று நடிகர் அஜித் குமாரும் அப்டேட் கொடுத்திருந்தார்.
இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெகு விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகி வாய்ப்புகள் இருப்பதாகக் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.