Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Trisha Krishnan : விஜய் சைலன்ட் கில்லர்.. நடிகை திரிஷா பேசிய உண்மை!

Trisha Described Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. அதில் விஜய்யின் லக்கி நடிகை ஒருவர்தான் திரிஷா கிருஷ்ணன். இந்நிலையில் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரிஷா விஜயை பற்றிப் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trisha Krishnan : விஜய் சைலன்ட் கில்லர்.. நடிகை திரிஷா பேசிய உண்மை!
த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் விஜய்Image Source: Social Media
barath-murugan
Barath Murugan | Updated On: 13 Jun 2025 09:29 AM

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உட்படப் பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். விஜய் (Vijay) முதல் பிரபாஸ் (Prabhas) வரை பல உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் கடந்த 1999ம் ஆண்டு , இயக்குநர் பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளியான ஜோடி (Jodi) என்ற படத்தில் துணை வேடத்தில் நடித்துத்தான் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தினை தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். இவர் முதலில் ஹீரோயினாக காமிட்டன திரைப்படம் லேசா லேசா. இயக்குநர் பிரியதர்சனின் அந்த படமானது வெளியாக்குவதற்கு தாமதமான நிலையில், அதற்கு முன் வெளியான சூர்யாவின் (Suriya) மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறியப்பட்டார்.

இந்த படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும், மொழிகளிலும் நடிகையாக நடிக்கத் தொடங்கினார். சினிமாவில் சுமார் 22 ஆண்டுகளைக் கடந்த திரிஷா இன்றுவரையிலும் படங்களில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிபிடகக்காது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக குட் பேட் அக்லி படமானது வெளியானது. அஜித்தின் முன்னணி நடிப்பில் வெளியான இப்படம் சுமார் ரூ. 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து 2025, ஆண்டு திரிஷாவின் நடிப்பில் வெளியான முதல் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் தக் லைஃப் படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை திரிஷா கிருஷ்ணன் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யால் பற்றிப் பேசியிருந்தார். அதை விஜயை பற்றி சைலன்ட் கில்லர் மற்றும் அவர் லக்கி சார்ம் என்று கூறியிருக்கிறார். அது குறித்துப் பார்க்கலாம்.

திரிஷா கிருஷ்ணன் போட்டோஷூட்

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

விஜயை பற்றி திரிஷா கிருஷ்ணன் சொன்ன விஷயம் :

நடிகை திரிஷா முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில் , நடிகர் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு நடிகை திரிஷா, “விஜய் ஒரு சார்ம், அவர் ஷூட்டிங்கில் எப்போது அமைதியாகி இருப்பார் அதனால் சைலன்ட் சார்ம் என்றும் கூறலாம் அல்லது சைலன்ட் கில்லர் என்றும் விஜயை கூறலாம். விஜய் பொறுத்தவரை மிகவும் அமைதியானவர் அவர் எப்போதுமே எனக்கு லக்கி சார்ம் என்று நடிகை திரிஷா கிருஷ்ணன் கூறியிருந்தார்.

விஜய் – திரிஷா கிருஷ்ணனின் கூட்டணி படங்கள் :

நடிகர்கள் தளபதி விஜய் மற்றும் திரிஷாவின் நடிப்பில் கிட்டத்தட்ட 5க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியிருக்கிறது.கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி மற்றும் இறுதியாக லியோ படத்திலும் நடித்திருந்தனர். இவர்கள் காமினேஷனில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது.மேலும் நடிகை திரிஷா நடிகர் விஜய்யின் தி கோட் படத்தில் மட்ட என்ற பாடலுக்கு விஜய்யுடன் சிறப்பு நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

கடைசி வரை திக் திக்.. ஓடிடியில் பார்க்க வேண்டிய த்ரில்லான படம்!
கடைசி வரை திக் திக்.. ஓடிடியில் பார்க்க வேண்டிய த்ரில்லான படம்!...
தமிழ்நாடு அரசு விடுதிகளில் இலவசமாக தங்கி படிக்க வேண்டுமா?
தமிழ்நாடு அரசு விடுதிகளில் இலவசமாக தங்கி படிக்க வேண்டுமா?...
விமானத்தில் எங்கு அமர்ந்தால் உயிர் பிழைக்கலாம்? முழு விவரம்
விமானத்தில் எங்கு அமர்ந்தால் உயிர் பிழைக்கலாம்? முழு விவரம்...
3BHK படத்தில் நடிக்க ஓகே சொன்ன காரணம் அதுதான்- சித்தார்த்
3BHK படத்தில் நடிக்க ஓகே சொன்ன காரணம் அதுதான்- சித்தார்த்...
இந்திய ஒருநாள் அணிக்கு அடுத்த கேப்டன் யார்? பரிசீலிக்கும் பிசிசிஐ
இந்திய ஒருநாள் அணிக்கு அடுத்த கேப்டன் யார்? பரிசீலிக்கும் பிசிசிஐ...
ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் பதற்றம்
ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் பதற்றம்...
1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்தது.. அமித்ஷா விளக்கம்
1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்தது.. அமித்ஷா விளக்கம்...
திருச்சி: புதிய கார் வாங்கியவருக்கு நேர்ந்த சோகம்... ஒருவர் பலி..
திருச்சி: புதிய கார் வாங்கியவருக்கு நேர்ந்த சோகம்... ஒருவர் பலி.....
மதுரையில் பயங்கரம்.. வீடு புகுந்து பிரபல ரவடி வெட்டிக் கொலை
மதுரையில் பயங்கரம்.. வீடு புகுந்து பிரபல ரவடி வெட்டிக் கொலை...
வேலூர்: 5 ஆண்டுகளாக பயன்பாடின்றி வீணாகும் பேருந்து நிலையம்..!
வேலூர்: 5 ஆண்டுகளாக பயன்பாடின்றி வீணாகும் பேருந்து நிலையம்..!...
அகமதாபாத் விமான விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
அகமதாபாத் விமான விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...