AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Benz : லோகேஷ் கனகராஜ் – ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்திலிருந்து வெளியான நியூ அப்டேட்!

Benz Movie Cast List Update : இயக்குநர் லோகேஷ் கனகராஜின் எழுத்தில் உருவாகிவரும் படம்தான் பென்ஸ். இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் முன்னணி நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜைகள் கடந்த 2025,மே மாதத்தில் நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து இப்படத்தில் இணைந்த நடிகர்களின் பட்டியல் பற்றி படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.

Benz : லோகேஷ் கனகராஜ் – ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்திலிருந்து வெளியான நியூ அப்டேட்!
பென்ஸ் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Jun 2025 18:20 PM IST

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படத்திற்குப் பெயர் போனவர் நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). தமிழ் சினிமாவில் நடிகராக  மட்டுமில்லாமல் காஞ்சனா (Kanchana)  என்ற சீரிஸை மொத்தமாக இயக்கியுள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் புதிதாக உருவாகி வரும் படம் பென்ஸ் (Benz). இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) தயாரித்து வருகிறார். இவரின் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் கதையையும், லோகேஷ் கனகராஜ்தான் எழுதியுள்ளார். இந்த படமானது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் எல்சியு தொகுப்பில் உருவாகும் அடுத்த திரைப்படமாகும், கைதி, விக்ரம் மற்றும் லியோ படத்தைத் தொடர்ந்து, இந்த பென்ஸ் படமும் லோகேஷ் சினிமெட்டிக் யுனிவர்ஸ் தொகுப்பில் இணையுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (Bakkiyaraj kannan)இயக்கி வருகிறார்.

இவர் ஏற்கனவே சுல்தான் மற்றும் ரெமோ போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸின் இந்த பென்ஸ் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் இணைந்த நிலையில், அவரை தொடர்ந்து அடுத்ததாக இணையும் நடிகர்களின் பட்டியல் எப்போது வெளியாகும் என்பதைக் குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி பென்ஸ் படத்தின் நடிகர்களின் பட்டியல், 2025, ஜூன் 4ம் தேதியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது .

ராகவா லாரன்ஸின் பென்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

 

நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிக்கவுள்ளார். அவரை தொடர்ந்து மலையாள பிரபல நடிகர் நிவின் பாலி முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என்றும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்துப் படக்குழு இன்னும் அறிவிப்புகளை வெளியிடவில்லை.  எந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்புகள், 2025, ஜூன் 4ம் தேதியில் வெளியாகவும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த பென்ஸ் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்து வருகிறார். லோகேஷ் கனகராஜின் இந்த படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட, 3 படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் முடிந்த நிலையில், அதை தொடர்ந்து இப்படத்திற்கு இசையமைக்கும் பனியின் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த படத்தை வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் கூறிவருகிறது.

Follow Us