Jana Nayagan : ‘தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு வந்த சிக்கல்?
Jana Nayagan Movie : நடிகர் விஜய்யின் முன்னணி நடிப்பில் இறுதி படமாக மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் படம் தக் லைஃப். இந்த படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடிக்க இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். சமீபத்தில் கமல்ஹாசனின் தக் லைப் கன்னட ரிலீஸ் தொடர்பாகப் பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில், தொடர்ந்து விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு புதிய சிக்கல் வந்துள்ளது.

கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர்தான் தளபதி விஜய் (Thalapathy Vijay) . இவரின் நடிப்பில் இறுதியாகக் கோட் படம் (GOAT) வெளியானது. அதைத் தொடர்ந்த நடிகர் விஜய்யின் நடிப்பில் 69வது படமாக உருவாகிவரும் படம் ஜன நாயகன் (Jana Nayagan) . இந்த படத்தை இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல கர்நாடக தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷ்ன் (KVN Productions) கம்பெனி இதைத் தயாரித்து வருகிறது. சமீப நாட்களாக நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) கன்னட மொழி குறித்து தவறாகப் பேசியதாகச் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த சர்ச்சையின் காரணத்தால் கன்னட மொழியில் தக் லைஃப் படத்தை வெளியிடத் தடை செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கமல்ஹாசன், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்னும் இப்படத்தின் ரிலீசிற்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், இணையத்தில் புதிய தகவலால் பரவி வருகிறது.
தக் லைஃப் படத்தைக் கர்நாடகாவில் வெளியிடத் தடை செய்தால், விஜய்யின் ஜன நாயகன் படத்தைத் தமிழகத்தில் வெளியிடக்கூடாது என்று பல கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யின் ஜன நாயகன் படத்தைத் தயாரிக்கும் கேவிஎன் ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் என்ன நிலையில், விஜய்யின் ஜன நாயகன் படத்தின் ரிலீசிற்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகிறது.




விஜய்யின் ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
பொங்கலுக்கு வருகிறோம்!
ಸಂಕ್ರಾಂತಿಗೆ ಬರುತ್ತಿದ್ದೇವೆ!
సంక్రాంతికి వస్తున్నాం!
पोंगल पर आ रहे हैं!
പൊങ്കലിന് വരുന്നു!
09.01.2026 ❤️#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju… pic.twitter.com/WIYOpyyQlN
— KVN Productions (@KvnProductions) March 24, 2025
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகிவருவது ஜன நாயகன். இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து விஜய் முழு நேர அரசியலில் இறங்கவுள்ளார். இவரின் இறுதி படம் என்பதால் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை கடந்த 2024ம் ஆண்டு இறுதியை நடைபெற்ற நிலையில், அதை தொடர்ந்து ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிவரும் நிலையில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்யின் ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர் பிரியாமணி, பாபி தியோல், நரேன், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ உட்படப் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக கூறப்படும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் நடிகர் விஜய் படத்தின் ஷூட்டிங்கை முடித்ததாகக் கூறப்படும் நிலையில், இனிமேல் முழுநேர அரசியலில் இறங்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஜன நாயகன் படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 09ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.