Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Silambarasan : அட இத்தனை கோடிகளா! ‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Silambarasan's salary In Thug Life Movie : நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் பத்து தல படத்தைத் தொடர்ந்து, மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்க, கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிலம்பரின் பெற்ற சம்பளம் குறித்துப் பார்க்கலாம்.

Silambarasan : அட இத்தனை கோடிகளா! ‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சிலம்பரசன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Jun 2025 23:40 PM

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம் (Mani Ratnam) இவரின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப் (Thug Life). பொன்னியின் செல்வன் பாகம் 2 (Ponniyin Selvan Part 2) படத்தைத் தொடர்ந்து, இந்த தக் லைஃப்திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். இந்த தக் லைப் படத்தின் கதையை நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan)  எழுதியுள்ளார். மேலும் இக்கதையில் இயக்குநர் மணிரத்னமும் தனக்கேற்ற மாற்றங்களை செய்ததாக நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இவ்வாறு பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சிலம்பரசனும் (Silambarasan) முன்னணி நாயகனாக நடித்துள்ளார்.  கமல் மற்றும் சிலம்பரசனுக்கிடையே உள்ள கதைதான் இந்த தக் லைஃப் என்பது டிரெய்லர் பார்க்கும் போதே தெரிகிறது.

இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிலம்பரசன் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் தெரியுமா? இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பதற்கு சுமார் ரூ. 40 கோடிகளைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்திற்காகக் கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கும் மேலாக இந்தப் படத்தில் நடித்த நிலையில், அவர் ரூ 40 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் சினியுலகம் செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

இந்த தக் லைஃப் படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் புரட்டிப்போட்டது. அதில் நடிகை த்ரிஷா நடிகர் கமல்ஹாசனுடன் நெருக்கமாக இருப்பது போல காட்சிகள் இருந்தது. இந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்துப் பேசிய த்ரிஷா படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு விமர்சியுங்கள் என்று கூறியிருந்தார்.

சிலம்பரசனின் நடிப்பில் உருவாக்கவுள்ள படங்கள் ;

தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் STR 49, 50 மற்றும் 51 என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். இதில் STR 49 படத்தை இயக்குநர் ராஜ்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2025, ஏப்ரல் இறுதியில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங்கும் நடந்துவந்தது. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடிக்கவுள்ளார்.

இப்படத்தய் தொடர்ந்து சிம்புவின் 50வது படத்தை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிம்பு திருநங்கை வேடத்திலும், சாதாரண வேடத்திலும் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தை அவரே தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR 51 படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.