Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Silambarasan : சிம்புவுடன் காதல் திருமணமா? உண்மையை உடைத்த பிரபலம் நடிகை!

Silambarasan Dating Rumors : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தக் லைஃப் படமானது ரிலீசிற்கு காத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இவர் பிரபல தெலுங்கு நடிகை ஒருவரைக் காதல் திருமணம் செய்யவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அதற்கு அந்த நடிகை விளக்கம் கொடுத்துள்ளார்.

Silambarasan : சிம்புவுடன் காதல் திருமணமா? உண்மையை உடைத்த பிரபலம் நடிகை!
சிம்புImage Source: Instagram
barath-murugan
Barath Murugan | Updated On: 31 May 2025 20:55 PM

கோலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகப் பலரின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சிலம்பரசன் (Silambarasan). இவர் நடிப்பில் இதுவரை சுமார் 47 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து இவரின் நடிப்பில் அடுத்தடுத்த 3 படங்கள் வரிசையில் இருக்கிறது. மேலும் இவரின் நடிப்பில் வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியாகவுள்ள படம் தக் லைஃப் (Thug Life). இந்த படமானது கமல்ஹாசனின் 234வது திரைப்படமாகக் கடந்த 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவந்தது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதைப் போல நடிகர் சிலம்பரசனின் கதாபாத்திரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கிறது.

மேலும் சமீப ஆண்டுகளாக நடிகர் சிலம்பரசன் பிரபல தெலுங்கு நடிகை ஒருவரைக் காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், அது குறித்து அந்த நடிகை விளக்கம் கொடுத்துள்ளார். அந்த நடிகை வேறு யாருமில்லை, சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நடிகை நிதி அகர்வால்தான் (Nidhi Agarwal).

நடிகை நிதி அகர்வாலின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Nidhi Agarwal (@nidhi_agarrwal)

நடிகை நிதி அகர்வால் உடைத்த உண்மை :

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் நிதி அகர்வால், இவரின் நடிப்பில் சுமார் 2 ஆண்டுக்கும் மேலாக உருவாகிவரும் தெலுங்கு படம்தான் ஹரி ஹர வீர மல்லு. இந்த படத்தில் நடிகர் பவன் கல்யாணுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் ஈஸ்வரன், பூமி போன்ற படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பாண் இந்திய நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை நிதி அகர்வால், சிம்புவுடன் காதல் திருமணமா என்பதைப் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகை நிதி அகர்வால், “சினிமாவில் ஹீரோயினியாக வந்துவிட்டால், அவர்களைப் பற்றிப் பல வதந்திகள் வரும். குறிப்பாக அவர்களின் திருமணம் பற்றிய வதந்திகளும் அதிகம் வரும். இதெல்லாம் சகஜம்தான். பொதுவாக மக்கள் அந்த வதந்திகள் மீது ஆர்வமாக இருப்பதால், அது அனைவரிடமும் வேகமாகப் பரவுகிறது. அதையெல்லாம், நான் பெரிதாகப் பொருட்படுத்தமாட்டேன் என்று நடிகை நிதி அகர்வால் கூறியுள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சிம்புவுடன் திருமணம் என்பதைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.

ஹரி ஹர வீர மல்லு :

மேலும் நடிகை நிதி அகர்வாலின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம்தான் ஹரி ஹர வீர மல்லு படம். இந்த படத்தில் நடிகர் பவன் கல்யாணுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படமானது வரும் 2025, ஜூன் 12ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் திறப்பு... போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு
பள்ளிகள் திறப்பு... போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு...
வதந்திகளை கிளப்பி என்ன முடிச்சிடலாம்னு நெனச்சா.... தனுஷ் அதிரடி
வதந்திகளை கிளப்பி என்ன முடிச்சிடலாம்னு நெனச்சா.... தனுஷ் அதிரடி...
உங்களுக்கு அடிக்கடி கண்ணீர் வருகிறதா? இந்த பிரச்னையாக இருக்கலாம்!
உங்களுக்கு அடிக்கடி கண்ணீர் வருகிறதா? இந்த பிரச்னையாக இருக்கலாம்!...
பிரான்ஸில் நடைபெறவுள்ள கார் ரேஸிற்கு தயாராகும் அஜித் குமார்!
பிரான்ஸில் நடைபெறவுள்ள கார் ரேஸிற்கு தயாராகும் அஜித் குமார்!...
வெல்லம் vs சர்க்கரை: வெள்ளை சர்க்கரையை விட வெல்லம் சிறந்ததா?
வெல்லம் vs சர்க்கரை: வெள்ளை சர்க்கரையை விட வெல்லம் சிறந்ததா?...
வந்து வந்து சென்ற மழை.. இறுதியாக தொடங்கிய மும்பை - பஞ்சாப் போட்டி
வந்து வந்து சென்ற மழை.. இறுதியாக தொடங்கிய மும்பை - பஞ்சாப் போட்டி...
ஹோட்டல்களில் சமையல் கலைஞர்கள் ஏன் வெள்ளை தொப்பி அணிகிறார்கள்?
ஹோட்டல்களில் சமையல் கலைஞர்கள் ஏன் வெள்ளை தொப்பி அணிகிறார்கள்?...
அதற்குப் பாலா சார்தான் காரணம் - நடிகர் சூர்யா!
அதற்குப் பாலா சார்தான் காரணம் - நடிகர் சூர்யா!...
மும்பைக்கு எப்படி இப்படி ஒரு அதிர்ஷ்டம்..? புலம்பிய அஸ்வின்!
மும்பைக்கு எப்படி இப்படி ஒரு அதிர்ஷ்டம்..? புலம்பிய அஸ்வின்!...
தக் லைஃப் படத்துடன் போட்டிப்போடும் சிறிய பட்ஜெட் படங்கள்!
தக் லைஃப் படத்துடன் போட்டிப்போடும் சிறிய பட்ஜெட் படங்கள்!...
உலர்ந்த பாதாம் Vs ஊற வைத்த பாதாம் – எது சிறந்தது?
உலர்ந்த பாதாம் Vs ஊற வைத்த பாதாம் – எது சிறந்தது?...