Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Trisha Krishnan: அந்த மலையாள ஹீரோவோடு நடிக்கணும்.. நடிகை த்ரிஷா ஆசை!

Actress Trisha Krishnans Dream : தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் த்ரிஷா கிருஷ்ணன். இவரின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைப். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய திரிஷா, பிரபல நடிகர் ஒருவருடன் இணைந்து நடிப்பதற்கு ஆசை என்று கூறியுள்ளார்.

Trisha Krishnan: அந்த மலையாள ஹீரோவோடு நடிக்கணும்.. நடிகை த்ரிஷா ஆசை!
திரிஷா கிருஷ்ணன்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 Jun 2025 09:29 AM

நடிகை திரிஷா (Trisha Krishnan) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இந்த இந்நிலையில் இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் (Ajith) இணைந்து ஜோடியாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட நடிகை திரிஷாவின் நடிப்பில் மட்டும் 2025ம் ஆண்டு தொடக்கத்தில் , தமிழில் 2 படங்களும் மற்றும் மலையாளத்தில் 1 படமும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படங்களைத் தொடர்ந்து, இந்த 2025ம் ஆண்டில் இவரின் நடிப்பில் 4வதாக வெளியாகவுள்ள திரைப்படம் தக் லைஃப் (Thug Life).

இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல் ஹாசன் (Kamal Haasan) கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் நெருங்கிய நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திரிஷா, தனக்கு நடிகர் பகத் ஃபாசில் உடன் இணைந்து நடிப்பதற்கு ஆசை என்று கூறியுள்ளார். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகை திரிஷா கிருஷ்ணன் பேசிய விஷயம் :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட திரிஷா கிருஷ்ணனிடம், உங்களுக்கு எந்த நடிகருடன் இணைந்து நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை த்ரிஷா, “சந்தேகமே தேவையில்லை, எனக்கு பகத் ஃபாசிலுடன் இணைந்தது நடிக்கவேண்டும் என்பதுதான் ஆசை. அவர் எந்த கதைகளில் நடித்தாலும் தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டுவார். அவர் மிகவும் அருமையான நடிகர்” என்று நடிகை திரிஷா கிருஷ்ணன் கூறியிருந்தார்.

நடிகை திரிஷா கிருஷ்ணனின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

 

தக் லைஃப் கொண்டாட்டம் :

கமல் ஹாசன் எழுத்தில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ளது தக் லைஃப். இந்த படத்தில் கமல் ஹாசனுடன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.