AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kamal Haasan: பணப் பேராசை தான் காரணம்.. நடிகர் கமல் வாழ்வில் நடந்த சம்பவம்!

2025 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி தக் லைஃப் படம் ரிலீசாகவுள்ளது. இதனிடையே நேர்காணல் ஒன்றில் கமல்ஹாசன் புகழின் இருண்ட பக்கங்களைப் பற்றி பேசியுள்ளார். பண ஆசை தனது வளர்ச்சியைத் தடுத்தது என்றும், புகழ் யதார்த்தத்திலிருந்து துண்டித்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் இது பற்றி கூறியுள்ளார்.

Kamal Haasan: பணப் பேராசை தான் காரணம்.. நடிகர் கமல் வாழ்வில் நடந்த சம்பவம்!
கமல்ஹாசன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 30 May 2025 21:00 PM IST

தக் லைஃப் (Thug Life) படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) புகழ் பெற்ற மனிதராக திகழும்போது ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அழுத்தங்கள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “புகழ் செல்வத்தை வேண்டுமானால் தரக்கூடும்.. ஆனால் அது ஒருபோதும் வளர்ச்சிக்கு இடமளிப்பதில்லை. தனது சினிமா வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் தான் ஒரு காலத்தில் விரும்பிய வெற்றியே என்னை தடுத்து நிறுத்தி விட்டது என சொல்லலாம். நடிகர்களை சுற்றி உருவாகும் புகழின் பிம்பத்தால் அவர்கள் தங்கள் யதார்த்தங்களில் இருந்து துண்டிக்கப்படுகிறார்கள். சினிமாவின் அழகு என்னவென்று கேட்டால் நீங்கள் ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை பெற முடியும். ஆனால் அதுவே உங்களுக்கான உண்மையான பாராட்டில் இருந்து உங்களை விலக்கி வைக்கிறது.

பேராசை தான் காரணம்

இதனால் நீங்களாகவே மற்றவர்களிடமிருந்து விலகிக் கொள்கிறீர்கள். எந்த ஒரு விமர்சனம் அல்லது பாராட்டை பெறாத நிலையில் கிடைக்க பெறும் அறிக்கை அல்லது ரசிகர்களை சந்திக்கும் போது எழும் உற்சாகம் ஆகியவை காரணமாக உங்களுக்குள் கர்வம் ஏற்படுகிறது. ஆனால் இது உண்மையான யதார்த்தம் கிடையாது.

நான் எனது பணி சூழல் காரணமாக அதிக குருக்களை தேடுவதை நிறுத்தி விட்டேன். பணத்திற்கான எனது பேராசை தான் என்னை கற்றுக் கொள்வதை தடுத்தது என நினைக்கிறேன். இல்லையென்றால் நான் இன்னும் அதிகமாக கற்றுக் கொண்டிருக்கலாம். என்னுடைய 20 வயதில் சுயமான வளர்ச்சியை வைத்து செல்வத்தை தேடி ஓடினேன். என் இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நான் சில காலம் அந்த பாதையை பின்பற்றி சென்று கொண்டிருந்தேன். இதனை தொடர்ந்து தான் அதில் விழிப்புணர்வு ஏற்பட்டு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கினேன். அதிர்ஷ்டவசமாக நான் என் 30 வயதுக்குள் அதை செய்து விட்டேன்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படம்


நடிகர் கமல்ஹாசன் – இயக்குநர் மணி ரத்னம் கூட்டணி நாயகன் படத்துக்குப் பின் 38 ஆண்டுகள் கழித்து தக் லைஃப் என்ற படத்தில் இணைந்துள்ளது. 2025, ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தில் சிலம்பரசன் டிஆர், அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், நாசர், சானியா மல்ஹோத்ரா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us