Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ravi mohan: யோகிபாபுவை இயக்கும் ரவிமோகன்.. ஷூட்டிங் பற்றி வெளியான அப்டேட்!

Ravi Mohan Directorial Debut Movie : தமிழ் சினிமாவை தொடர்ந்து, விவாகரத்து சர்ச்சையால் பான் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர்தான் ரவி மோகன். இவர் சினிமாவில் முன்னணி நாயகனாகப் பல படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக வலம்வந்த இவர் மேலும் இயக்குநராக, யோகி பாபுவை வைத்துப் படத்தை இயக்கவுள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் அப்டேட்டை பற்றிப் பார்க்கலாம்.

Ravi mohan: யோகிபாபுவை இயக்கும் ரவிமோகன்.. ஷூட்டிங் பற்றி வெளியான அப்டேட்!
ரவி மோகன் யோகி பாபுImage Source: Social media
barath-murugan
Barath Murugan | Updated On: 31 May 2025 12:33 PM

நடிகர் ரவி மோகன் (Ravi Mohan)  தமிழ் சினிமாவையும் தொடர்ந்து, தெலுங்கிலும் படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படங்கள் பிரதர் (Brother)  மற்றும் காதலிக்க நேரமில்லை (kadhalikka Neramillai). தொடர்ந்து வெளியான இந்த இரு படங்களும் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை. இந்த படங்களைத் தொடர்ந்தும் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பராசக்தி (parasakthi)  படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, கராத்தே பாபு, ஜின் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகராகப் பல படங்களில் நடித்துவரும் ரவி மோகன், இதைத் தொடர்ந்து இயக்குநராகவும் படங்களை இயக்கவுள்ளதாக, முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து அந்த படத்தை நடிகர் யோகி பாபுவை வைத்து இயக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இயக்குநராக அறிமுகமாகும் ரவி மோகனின் படம் :

இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025 ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

நடிகர் ரவி மோகனின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Ravi Mohan (@iam_ravimohan)

 

ரவி மோகனின் விவாகரத்து விவகாரம் ;

சமீபகாலமாக நடிகர் ரவி மோகன் மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து தொடர்பான செய்திகள் மக்கள் மத்தியில் உலா வருகிறது. இவர்கள் இருவரின் விவாகரத்து செய்தியானது ஒட்டுமொத்த பான் இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்தது என்றே கூறலாம். இருவரும் மாற்றி மாற்றி அறிக்கையை வெளியிட்டு, தாக்கி பேசிவந்தனர். இதைத் தொடர்ந்து இவர்களில் பிரச்சனை சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வந்தது.

இதைத் தொடர்ந்து இவர்களில் விவாகரத்து தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம், விவாகரத்தை வரும் 2025, ஜூன் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இவர்கள் இருவரும் இந்த தேதியில் தங்களின் பக்கம் இருக்கும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து தொடர்பான வழக்கு மத்தியிலும் நடிகர் ரவி மோகன் தற்போது புது முயற்சியில் இறங்கவுள்ளார்.

நடிகர் தனுஷை போலப் படங்களை இயக்கவுள்ளாராம். இது குறித்து அவர் முன்னதாகவே பேசியிருந்தார். யோகி பாபுவை வைத்து அவர் இயக்கம் புதிய படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெல்லம் vs சர்க்கரை: வெள்ளை சர்க்கரையை விட வெல்லம் சிறந்ததா?
வெல்லம் vs சர்க்கரை: வெள்ளை சர்க்கரையை விட வெல்லம் சிறந்ததா?...
வந்து வந்து சென்ற மழை.. இறுதியாக தொடங்கிய மும்பை - பஞ்சாப் போட்டி
வந்து வந்து சென்ற மழை.. இறுதியாக தொடங்கிய மும்பை - பஞ்சாப் போட்டி...
ஹோட்டல்களில் சமையல் கலைஞர்கள் ஏன் வெள்ளை தொப்பி அணிகிறார்கள்?
ஹோட்டல்களில் சமையல் கலைஞர்கள் ஏன் வெள்ளை தொப்பி அணிகிறார்கள்?...
அதற்குப் பாலா சார்தான் காரணம் - நடிகர் சூர்யா!
அதற்குப் பாலா சார்தான் காரணம் - நடிகர் சூர்யா!...
மும்பைக்கு எப்படி இப்படி ஒரு அதிர்ஷ்டம்..? புலம்பிய அஸ்வின்!
மும்பைக்கு எப்படி இப்படி ஒரு அதிர்ஷ்டம்..? புலம்பிய அஸ்வின்!...
தக் லைஃப் படத்துடன் போட்டிப்போடும் சிறிய பட்ஜெட் படங்கள்!
தக் லைஃப் படத்துடன் போட்டிப்போடும் சிறிய பட்ஜெட் படங்கள்!...
உலர்ந்த பாதாம் Vs ஊற வைத்த பாதாம் – எது சிறந்தது?
உலர்ந்த பாதாம் Vs ஊற வைத்த பாதாம் – எது சிறந்தது?...
கேரளாவில் கொரோனா கொடூர ஆட்டம்! இந்தியளவிலும் புதிய உச்சம்..!
கேரளாவில் கொரோனா கொடூர ஆட்டம்! இந்தியளவிலும் புதிய உச்சம்..!...
விஜய் சேதுபதியின் 'ஏஸ்' படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதானா?
விஜய் சேதுபதியின் 'ஏஸ்' படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதானா?...
நடிகர் மாதவனின் நடிப்பில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ
நடிகர் மாதவனின் நடிப்பில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ...
கமலின் தக் லைஃப்; கர்நாடகா திரையரங்குகள் புறக்கணிப்பு?
கமலின் தக் லைஃப்; கர்நாடகா திரையரங்குகள் புறக்கணிப்பு?...